திருமூலர் அருளிய திருமந்திரம்
18. தீர்த்தம்

இரண்டாம் தந்திரம் பாடல் 509–514 (6 பாடல்கள்)

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்பள்ளமும் மேடும் பரந்து திரிவரேகள்ள மனமுடையக் கல்வியி லோரே.

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்குளியறி வாளர்க்குக் கூடவும் வொண்ணான்வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்கும்தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்கள்ளத்தி னாலுங் கலந்தறி வார்இல்லைவெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்பள்ளத்தில் இட்டதுஓர் பத்தலுள் ளாமே.

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்செறிவா னுறைபதஞ் சென்று வலங்கொள்மறியார் வளைக்கை வருபுனற் கங்கைப்பொறியார் புனல்மூழ்கப் புண்ணிய ராமே.

கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்உடலுறத் தேடுவார் தம்மையொப் பாரேதிடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்கலந்தது நீர துடம்பிற் வெளுக்கும்கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #509

1 / 6

0:000:00
18. தீர்த்தம்பாடல் 509

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com