தொடர்ந்து படிக்கread this section continuously
உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்பள்ளமும் மேடும் பரந்து திரிவரேகள்ள மனமுடையக் கல்வியி லோரே.
உரைmeaning
உயிர்களின் உள்ளத்துக்குள் பலவித புனித தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றைத் தியானத்தின் மூலம் மெள்ள ஆராய்ந்து உணர்ந்து, அதனுள் மூழ்கிக் குளித்துத் தங்களின் வினைகளை நீங்க முயற்சி செய்யாமல், தங்களின் வினைகளைக் கழிக்க உலகத்தில் இருக்கும் புனித தீர்த்தங்களைத் தேடிப் பள்ளத்தாக்குகளுக்கும் மலை மேடுகளுக்கும் அலைந்து திரிகின்றவர்கள், பொய்யான மனதைக் கொண்ட உண்மை ஞானமில்லாதவர்கள்.
Many kinds of sacred waters lie within the heart of every living being. Those who, instead of slowly searching them out through meditation, realizing them and bathing within them to strive against their own deeds, wander searching the world's low valleys and hill heights for sacred waters to wash away their deeds, are people of a false heart, without true wisdom.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களின் உள்ளத்துக்குள் பலவித புனித தீர்த்தங்கள் இருக்கின்றன.
Many kinds of sacred waters lie within the heart of every living being.
- வரி 2Line 2
அவற்றைத் தியானத்தின் மூலம் மெள்ள ஆராய்ந்து உணர்ந்து, அதனுள் மூழ்கிக் குளித்துத் தங்களின் வினைகளை நீங்க முயற்சி செய்யாமல்,
Instead of slowly searching them out through meditation, realizing them and bathing within them to strive against their own deeds,
- வரி 3Line 3
தங்களின் வினைகளைக் கழிக்க உலகத்தில் இருக்கும் புனித தீர்த்தங்களைத் தேடிப் பள்ளத்தாக்குகளுக்கும் மலை மேடுகளுக்கும் அலைந்து திரிகின்றவர்கள்,
those who wander searching the world's low valleys and hill heights for sacred waters to wash away their deeds,
- வரி 4Line 4
அவர்கள் பொய்யான மனதைக் கொண்ட உண்மை ஞானமில்லாதவர்கள்.
are people of a false heart, without true wisdom.
திருமந்திரம் பாடல் #509





