தொடர்ந்து படிக்கread this section continuously
தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்குளியறி வாளர்க்குக் கூடவும் வொண்ணான்வளியறி வாளர்க்கு வாய்க்கிலும் வாய்க்கும்தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே.
உரைmeaning
கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் முறையை அறிந்தவர்க்கு இறைவனின் அருள் குளிர்ச்சியாய்த் தோன்றும். அவனே அந்தக் கோவிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் குளித்தால் பாவங்கள் தீர்ந்துவிடும் என்றும் இறைவனை அடைந்துவிடலாம் என்றும் எண்ணினால், இறைவன் பக்கத்தில் கூட நிற்க மாட்டான். அவனே மூச்சை அடக்கி முறைப்படி தியானம் செய்யத் தெரிந்தவனாய் அதைச் செயல்படுத்தினால், இறைவனின் அருள் கிடைத்தாலும் கிடைக்கும். அவனே தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தை உணர்ந்து தெளிந்துவிட்டால், அவன் சிந்தனையில்தான் இறைவன் எப்போதுமே குடிகொண்டிருக்கின்றான்.
To one who knows the manner of going to temples and worshipping God there, God's grace appears cool and refreshing. If that same person thinks that bathing in the temple's sacred tank alone will wash away sins and reach God, God will not even come near him. If that same person knows disciplined breath and meditation practiced by the proper method, and puts it into practice, God's grace may be attained, if it is to be attained at all. And if that same person realizes and grows clear about the sacred water within his own heart, then it is in his thought alone that God always dwells.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபடும் முறையை அறிந்தவர்க்கு இறைவனின் அருள் குளிர்ச்சியாய்த் தோன்றும்.
To one who knows the manner of going to temples and worshipping God there, God's grace appears cool and refreshing.
- வரி 2Line 2
அவனே கோவிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் குளித்தால் பாவங்கள் தீர்ந்து இறைவனை அடைந்துவிடலாம் என்று எண்ணினால், இறைவன் பக்கத்தில் கூட நிற்க மாட்டான்.
If that same person thinks that bathing in the temple's sacred tank alone will wash away sins and reach God, God will not even come near him.
- வரி 3Line 3
அவனே மூச்சை அடக்கி முறைப்படி தியானம் செய்யத் தெரிந்தவனாய் அதைச் செயல்படுத்தினால், இறைவனின் அருள் கிடைத்தாலும் கிடைக்கும்.
If that same person knows disciplined breath and meditation practiced by the proper method, and puts it into practice, God's grace may be attained, if it is to be attained at all.
- வரி 4Line 4
அவனே தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தை உணர்ந்து தெளிந்துவிட்டால், அவன் சிந்தனையில்தான் இறைவன் எப்போதுமே குடிகொண்டிருக்கின்றான்.
And if that same person realizes and grows clear about the sacred water within his own heart, then it is in his thought alone that God always dwells.
திருமந்திரம் பாடல் #510





