தொடர்ந்து படிக்கread this section continuously
உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்கள்ளத்தி னாலுங் கலந்தறி வார்இல்லைவெள்ளத்தை நாடி விடுமவர் தீவினைப்பள்ளத்தில் இட்டதுஓர் பத்தலுள் ளாமே.
உரைmeaning
உயிர்கள் தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்தால், தமக்குள் இருக்கும் இறைவன் ஒருவனை உணரலாம். அந்த இறைவனுக்கு அடியவர் போல நடித்துக்கொண்டாவது அவனோடு கலந்து அவனை அறிந்துகொள்ளுபவர்கள் எவருமில்லை. நதிகளுக்கும் குளங்களுக்கும் சென்று மூழ்கி எழுபவர்களுடைய பாவ வினைகள், கிணற்றில் விட்ட ஓட்டைக் குடம் போன்றதே ஆகும்.
If living beings bathe and immerse themselves in the sacred waters within their own heart, they can realize the one God who dwells within. There is no one who even acts as his devotee to mingle with him and come to know him. The sinful deeds of those who go and bathe and rise in rivers and tanks are like a leaking pot let down into a well.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்கள் தமது உள்ளத்தில் இருக்கும் தீர்த்தத்தில் மூழ்கிக் குளித்தால், தமக்குள் இருக்கும் இறைவன் ஒருவனை உணரலாம்.
If living beings bathe and immerse themselves in the sacred waters within their own heart, they can realize the one God who dwells within.
- வரி 2Line 2
அந்த இறைவனுக்கு அடியவர் போல நடித்துக்கொண்டாவது அவனோடு கலந்து அவனை அறிந்துகொள்ளுபவர்கள் எவருமில்லை.
There is no one who even acts as his devotee to mingle with him and come to know him.
- வரி 3Line 3
நதிகளுக்கும் குளங்களுக்கும் சென்று மூழ்கி எழுபவர்களுடைய பாவ வினைகள்,
The sinful deeds of those who go and bathe and rise in rivers and tanks,
- வரி 4Line 4
கிணற்றில் விட்ட ஓட்டைக் குடம் போன்றதே ஆகும்.
are like a leaking pot let down into a well.
திருமந்திரம் பாடல் #511





