திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 496

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பெத்தத்தர் சித்தொடு பேண்முத்திச் சித்ததுஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்மத்தத்து மும்மலம் வாடுகை மாட்டாதார்சத்தத்து அமிழ்ந்து சகலத்து ளாரே.

உரை

உயிர்களின் வகைகளில் மூன்றாவதாக இருப்பவர்கள், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் கொண்ட அஞ்ஞானர். இவர்கள் முத்தர், சாதகர், சகலர் என மூன்று வகையினராக இருக்கின்றனர். முன் ஜென்ம நல்வினைப் பயனால் இறைவனே குருவாக மனித உருவில் வந்து கொடுத்த ஞானத்தைப் பெற்று, மும்மலம் கொண்ட தம் ஆன்மாவைச் சிவத்தோடு இரண்டறக் கலந்து முக்தி பெற்றோர் முத்தர். முன் ஜென்ம வினைப் பயனால் இறையருளைப் பெற்று தியானம், தவம், யோகப்பயிற்சி, பூஜைகள் செய்துகொண்டிருப்பவர் சாதகர்; இவர்கள் தாம் மேற்கொண்ட சாதகங்களின் பயனால் மும்மலங்களால் உருவாகும் துன்பங்களில் பாதிக்கப்படாமல் இருப்பர். மாயையால் உலக வாழ்க்கையிலேயே அமிழ்ந்து கிடந்து மும்மலங்களின் வலிமை அதிகமாகப் பெற்றவர் சகலர்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களின் வகைகளில் மூன்றாவதாக இருப்பவர்கள், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் கொண்ட அஞ்ஞானர். இவர்கள் முத்தர், சாதகர், சகலர் என மூன்று வகையினராக இருக்கின்றனர்.

  • வரி 2

    முன் ஜென்ம நல்வினைப் பயனால் இறைவனே குருவாக மனித உருவில் வந்து கொடுத்த ஞானத்தைப் பெற்று, மும்மலம் கொண்ட தம் ஆன்மாவைச் சிவத்தோடு இரண்டறக் கலந்து முக்தி பெற்றோர் முத்தர்.

  • வரி 3

    முன் ஜென்ம வினைப் பயனால் இறையருளைப் பெற்று தியானம், தவம், யோகப்பயிற்சி, பூஜைகள் செய்துகொண்டிருப்பவர் சாதகர்; இவர்கள் தாம் மேற்கொண்ட சாதகங்களின் பயனால் மும்மலங்களால் உருவாகும் துன்பங்களில் பாதிக்கப்படாமல் இருப்பர்.

  • வரி 4

    மாயையால் உலக வாழ்க்கையிலேயே அமிழ்ந்து கிடந்து மும்மலங்களின் வலிமை அதிகமாகப் பெற்றவர் சகலர்.

திருமந்திரம் பாடல் #496

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout