திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 497

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்நவமான தத்துவம் நாடிக்கண் டாரே.

உரை

ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து வலிமைமிக்க மலங்களையும் வென்று, தாமே சிவமாகி, சித்தர்கள் சாயுச்சியம் என்னும் பேரின்பப் பெருவாழ்வு பெற்று, அதிலேயே என்றும் திளைத்திருப்பர். இவர்கள் இறவாத நிலை பெற்றதால் எப்போதும் பிறவியில்லா நிலையை அடைந்து, பசு பாசம் ஆகிய இரண்டையும் நீங்கி, பதியாக இருக்கும் ஒன்பது வகைத் தத்துவங்களைத் தமது தவத்தால் உணர்ந்து அடைந்தார்கள். (பதி என்பது இறைவனின் பேரான்மா; பசு என்பது அதிலிருந்து பிரிந்து பிறந்த ஜீவான்மா; பாசம் என்பது அவ்விரண்டையும் பிரித்து மலங்களால் கட்டி வைத்திருப்பது. பசுவாகிய ஜீவான்மா தன் பாசமாகிய மலங்களை அறுத்துப் பதியாகிய பரமாத்மாவை அடையும்போது முக்தி பெற்று மீண்டும் பிறவி இல்லாமல் ஆகிறது.)

வரி வாரியாக

  • வரி 1

    ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து வலிமைமிக்க மலங்களையும் வென்று, தாமே சிவமாகி, சித்தர்கள் சாயுச்சியம் என்னும் பேரின்பப் பெருவாழ்வு பெற்று, அதிலேயே என்றும் திளைத்திருப்பர்.

  • வரி 2

    இவர்கள் இறவாத நிலை பெற்றதால் எப்போதும் பிறவியில்லா நிலையை அடைந்து, பசு பாசம் ஆகிய இரண்டையும் நீங்கி, பதியாக இருக்கும் ஒன்பது வகைத் தத்துவங்களைத் தமது தவத்தால் உணர்ந்து அடைந்தார்கள்.

  • வரி 3

    பதி என்பது இறைவனின் பேரான்மா; பசு என்பது அதிலிருந்து பிரிந்து பிறந்த ஜீவான்மா; பாசம் என்பது அவ்விரண்டையும் பிரித்து மலங்களால் கட்டி வைத்திருப்பது.

  • வரி 4

    பசுவாகிய ஜீவான்மா தன் பாசமாகிய மலங்களை அறுத்துப் பதியாகிய பரமாத்மாவை அடையும்போது முக்தி பெற்று மீண்டும் பிறவி இல்லாமல் ஆகிறது.

திருமந்திரம் பாடல் #497

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout