தொடர்ந்து படிக்கread this section continuously
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தன்இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே.
உரைmeaning
உயிர்களின் வகைகளில் இரண்டாவதாக இருக்கும் மெய்பிரளய அகலர் அனைவரும் பிரளயகாலப் பேரழிவில் முக்தி பெறுவர். ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை மட்டும் கொண்ட இவர்கள் அபக்குவர், பரமுத்தர், அபரமுத்தர் என்ற பெயர்களில் இருக்கின்றனர். அபக்குவர், பரமுத்தர் என்ற இரு வகையினர் 54-54 என்ற எண்ணிக்கையில் நூற்றெட்டு உருத்திரர்களாக இருக்கின்றனர். அபரமுக்தர் ஒரு வகையாக, மொத்தம் மூன்று வகைகளாக இருக்கின்றனர். விஞ்ஞானரும் இந்த மெய்பிரளய அகலரும் அல்லாத மற்ற அனைவரும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் கொண்ட அஞ்ஞானர் ஆவர்.
Among the kinds of souls, the second, the mei-piralaya-agalar, all attain liberation in the great dissolution at the end of the age. Carrying only the two impurities of egoism and karma, they exist under the names abakkuvar, paramuktar and aparamuktar. The two kinds abakkuvar and paramuktar exist as the hundred and eight Rudras, fifty four and fifty four. Aparamuktar form one further kind, making three kinds in all. All others, who are neither the vinjnanar nor these mei-piralaya-agalar, are the agnyanar, who carry all three impurities of egoism, karma and maya.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களின் வகைகளில் இரண்டாவதாக இருக்கும் மெய்பிரளய அகலர் அனைவரும் பிரளயகாலப் பேரழிவில் முக்தி பெறுவர்.
Among the kinds of souls, the second, the mei-piralaya-agalar, all attain liberation in the great dissolution at the end of the age.
- வரி 2Line 2
ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களை மட்டும் கொண்ட இவர்கள் அபக்குவர், பரமுத்தர், அபரமுத்தர் என்ற பெயர்களில் இருக்கின்றனர்.
Carrying only the two impurities of egoism and karma, they exist under the names abakkuvar, paramuktar and aparamuktar.
- வரி 3Line 3
அபக்குவர், பரமுத்தர் என்ற இரு வகையினர் 54-54 என்ற எண்ணிக்கையில் நூற்றெட்டு உருத்திரர்களாக இருக்கின்றனர். அபரமுக்தர் ஒரு வகையாக, மொத்தம் மூன்று வகைகளாக இருக்கின்றனர்.
The two kinds abakkuvar and paramuktar exist as the hundred and eight Rudras, fifty four and fifty four. Aparamuktar form one further kind, making three kinds in all.
- வரி 4Line 4
விஞ்ஞானரும் இந்த மெய்பிரளய அகலரும் அல்லாத மற்ற அனைவரும், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் கொண்ட அஞ்ஞானர் ஆவர்.
All others, who are neither the vinjnanar nor these mei-piralaya-agalar, are the agnyanar, who carry all three impurities of egoism, karma and maya.
திருமந்திரம் பாடல் #495





