திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 494

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்தஞ்ஞானர் அட்டவித் தேசுரஞ் சார்ந்துளோர்எஞ்ஞானம் ஏழ்கோடி மந்திர நாயகர்மெய்ஞ்ஞானர் ஆணவமும் விட்டுநின் றாரே.

உரை

உயிர்களின் வகைகளில் முதலாவதாக இருக்கும் விஞ்ஞானர், மாயையும் கன்மமும் நீங்கப்பெற்ற ஜீவன்முக்தர்களாக நான்கு வகைப்பட்டு இருப்பர். முதல் வகையினர் ஞானம் பெற்றும் ஆணவம் நீங்காத தஞ்ஞானர். இரண்டாம் வகையினர் அட்டவித்தீசுர நிலையை அடைந்த எஞ்ஞானர். மூன்றாம் வகையினர் ஏழு கோடி மந்திரங்களின் நிலையை அடைந்த மந்திர நாயகர். நான்காம் வகையினர், உண்மை ஞானமாகிய பேரறிவைப் பெற்று ஆணவ மலத்தையும் விட்டு நின்ற மெய்ஞ்ஞானர்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்களின் வகைகளில் முதலாவதாக இருக்கும் விஞ்ஞானர், மாயையும் கன்மமும் நீங்கப்பெற்ற ஜீவன்முக்தர்களாக நான்கு வகைப்பட்டு இருப்பர்.

  • வரி 2

    முதல் வகையினர் ஞானம் பெற்றும் ஆணவம் நீங்காத தஞ்ஞானர். இரண்டாம் வகையினர் அட்டவித்தீசுர நிலையை அடைந்த எஞ்ஞானர்.

  • வரி 3

    மூன்றாம் வகையினர் ஏழு கோடி மந்திரங்களின் நிலையை அடைந்த மந்திர நாயகர்.

  • வரி 4

    நான்காம் வகையினர், உண்மை ஞானமாகிய பேரறிவைப் பெற்று ஆணவ மலத்தையும் விட்டு நின்ற மெய்ஞ்ஞானர்.

திருமந்திரம் பாடல் #494

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout