திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 493

இரண்டாம் தந்திரம்15. மூவகைச் சீவ வர்க்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே

உரை

உடலோடு இருக்கும்போதே இறைவனை உணர்ந்து உண்மை ஞானத்தை அடைந்தோர், ஆணவ மலத்தை மட்டுமே கொண்டவர்களாக விஞ்ஞானர் என நான்கு வகையினராக இருப்பர். மாயை நீங்கினும் ஆணவமும் கன்மமும் நீங்காததால் பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்குக் காத்திருப்போர், மெய்பிரளய அகலர் என மூன்று வகையினராக இருப்பர். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் கொண்டோர், அஞ்ஞானர் என மூன்று வகையினராக இருப்பர். இவ்வாறு விஞ்ஞானர், மெய்பிரளய அகலர், அஞ்ஞானர் என உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் மூன்று பிரிவாகப் பத்து வகையினராக வேறுபட்டு இருக்கின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    உடலோடு இருக்கும்போதே இறைவனை உணர்ந்து உண்மை ஞானத்தை அடைந்தோர், ஆணவ மலத்தை மட்டுமே கொண்டவர்களாக விஞ்ஞானர் என நான்கு வகையினராக இருப்பர்.

  • வரி 2

    மாயை நீங்கினும் ஆணவமும் கன்மமும் நீங்காததால் பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்குக் காத்திருப்போர், மெய்பிரளய அகலர் என மூன்று வகையினராக இருப்பர்.

  • வரி 3

    ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் கொண்டோர், அஞ்ஞானர் என மூன்று வகையினராக இருப்பர்.

  • வரி 4

    இவ்வாறு விஞ்ஞானர், மெய்பிரளய அகலர், அஞ்ஞானர் என உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் மூன்று பிரிவாகப் பத்து வகையினராக வேறுபட்டு இருக்கின்றன.

திருமந்திரம் பாடல் #493

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout