தொடர்ந்து படிக்கread this section continuously
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்டநிற்குந் துரியம் பேதித்து நினைவெழவற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.
உரைmeaning
கரு உருவாகும்போது முதலில் அது தனித்து கேவல நிலையில் இருக்கும். அதன்பிறகு மாயை தன் தத்துவங்களைக் கருவோடு சேர்க்கும்போது, அதுவரை துரிய நிலையில் உறக்கத்தில் இருந்த கரு அந்த நிலையிலிருந்து மாறி விழித்துக்கொண்டு நினைவு தோன்ற ஆரம்பிக்கும். நினைவு தோன்றியபின், அந்தக் கருவின் முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்துவரும் வினைப்பயனால் வரும் கன்மத்துடன் அசுத்த மாயையின் ஏழுவித காரியங்களும் சேர்ந்து, மொத்தம் எட்டுவித மாயைகளை அந்தக் கரு பெற்றுவிடும். இதுவே கருவுடன் மாயைகள் சேரும் முறைமை என்று தூய்மையான வேதங்கள் சொல்கின்றன.
When the embryo first comes into being, it exists alone, in the bare state called kevala. After that, when maya joins its principles to the embryo, the embryo, which until then lay asleep in the turiya state, changes out of that state, awakens, and thought begins to arise in it. Once thought has arisen, the karma that continues to come from the fruits of its past deeds through earlier births joins with the seven workings of impure maya, and together they make up the eight kinds of maya that the embryo comes to bear. The pure Vedas declare that this is the manner in which maya joins with the embryo.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கரு உருவாகும்போது முதலில் அது தனித்து கேவல நிலையில் இருக்கும்.
When the embryo first comes into being, it exists alone, in the bare state called kevala.
- வரி 2Line 2
அதன்பிறகு மாயை தன் தத்துவங்களைக் கருவோடு சேர்க்கும்போது, அதுவரை துரிய நிலையில் உறக்கத்தில் இருந்த கரு அந்த நிலையிலிருந்து மாறி விழித்துக்கொண்டு நினைவு தோன்ற ஆரம்பிக்கும்.
After that, when maya joins its principles to the embryo, the embryo, which until then lay asleep in the turiya state, changes out of that state, awakens, and thought begins to arise in it.
- வரி 3Line 3
நினைவு தோன்றியபின், அந்தக் கருவின் முற்பிறவிகளிலிருந்து தொடர்ந்துவரும் வினைப்பயனால் வரும் கன்மத்துடன் அசுத்த மாயையின் ஏழுவித காரியங்களும் சேர்ந்து,
Once thought has arisen, the karma that continues to come from the fruits of its past deeds through earlier births joins with the seven workings of impure maya,
- வரி 4Line 4
மொத்தம் எட்டுவித மாயைகளை அந்தக் கரு பெற்றுவிடும். இதுவே கருவுடன் மாயைகள் சேரும் முறைமை என்று தூய்மையான வேதங்கள் சொல்கின்றன.
and together they make up the eight kinds of maya that the embryo comes to bear. The pure Vedas declare that this is the manner in which maya joins with the embryo.
திருமந்திரம் பாடல் #460





