தொடர்ந்து படிக்கread this section continuously
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்போல்வளர்ந் துள்ளே பொருந்துஉரு வாமே.
உரைmeaning
ஆண் பெண் இன்பத்தின் முடிவில் பெண்ணின் வயிற்றில் தங்கும் கருவானது, மனித உடலின் உள் நாக்கிற்கு மேலே இருக்கும் சுழுமுனை நாடித் துளை வழியே தரிசிக்கப்படும் ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகும். அந்தக் கரு குழந்தையாக மாறும்போது சூரியனைப் போன்ற தகதகக்கும் தங்க நிறத்தில் இருக்கும். பிறகு அதுவே உடலின் பல்வேறு உறுப்புகளாக வளரும்போது, தந்தை தாயின் உருவத்திற்கு ஏற்ப குழந்தையின் உருவமும் பொருத்தமாக வளரும்.
At the close of the union of man and woman, the seed that comes to rest in the woman's womb is a portion of God, shining like light, that is beheld through the channel of the sushumna nadi that lies above the inner tongue in the human body. When that seed turns into a child, it holds the blazing golden colour of the sun. Afterwards, as it grows into the body's various limbs, the form of the child grows to fit the form of the father and the mother.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆண் பெண் இன்பத்தின் முடிவில் பெண்ணின் வயிற்றில் தங்கும் கருவானது, மனித உடலின் உள் நாக்கிற்கு மேலே இருக்கும் சுழுமுனை நாடித் துளை வழியே தரிசிக்கப்படும் ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகும்.
At the close of the union of man and woman, the seed that comes to rest in the woman's womb is a portion of God, shining like light, that is beheld through the channel of the sushumna nadi that lies above the inner tongue in the human body.
- வரி 2Line 2
அந்தக் கரு குழந்தையாக மாறும்போது சூரியனைப் போன்ற தகதகக்கும் தங்க நிறத்தில் இருக்கும்.
When that seed turns into a child, it holds the blazing golden colour of the sun.
- வரி 3Line 3
பிறகு அதுவே உடலின் பல்வேறு உறுப்புகளாக வளரும்போது,
Afterwards, as it grows into the body's various limbs,
- வரி 4Line 4
தந்தை தாயின் உருவத்திற்கு ஏற்ப குழந்தையின் உருவமும் பொருத்தமாக வளரும்.
the form of the child grows to fit the form of the father and the mother.
திருமந்திரம் பாடல் #484





