திருமூலர் அருளிய திருமந்திரம்
13. அநுக்கிரகம்

இரண்டாம் தந்திரம் பாடல் 441–450 (10 பாடல்கள்)

எட்டுத் திசையும் அடிக்கின்ற காற்றவன்வட்டத் திரையனல் மாநிலம் ஆகாசம்ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பைகட்டி அவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமே.

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தைநச்சியே இன்பங்கொள் வார்க்கு நமனில்லைவிச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கும்தச்சும் அவனேதான் சமைக்கவல் லானே.

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்அசையில் உலகம் அதுவிது வாமே.

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்படையுடை யான்பரி சேஉல காக்கும்கொடையுடை யான்குண மேகுண மாகும்சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்உகந்துநின் றேபடைத் தான்பல ஊழிஉகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்படைத்துடை யான்பல தேவரை முன்னேபடைத்துடை யான்பல சீவரை முன்னேபடைத்துடை யான்பர மாகிநின் றானே.

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதங்கள்ஆதி படைத்தனன் ஆயபல் ஊழிகள்ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரைஆதி படைத்தவையும் தாங்கிநின் றானே.

அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகிஇவன்றா னெனநின் றெளியனும் அல்லன்சிவன்றான் பலபல சீவனும் ஆகிநவின்றான் உலகுறு நம்பனு மாமே.

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்கண்ணின்ற மாமணி மாபோதக மாமே.

ஆரும் அறியாதவ் வண்டத் திருவுருப்பார்முத லாகப் பயிலுங் கடத்திலேநீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்சோராமற் காணும் சுகமுமறிந் தேனே.

திருமந்திரம் பாடல் #441

1 / 10

0:000:00
13. அநுக்கிரகம்பாடல் 441

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout