திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 444

இரண்டாம் தந்திரம்13. அநுக்கிரகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்படையுடை யான்பரி சேஉல காக்கும்கொடையுடை யான்குண மேகுண மாகும்சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

உரை

காளையை வாகனமாகக் கொண்டவனும், வேறுபட்ட பலவித உருவங்களில் ஒன்றாக இருப்பவனும், பூதகணங்களைப் படையாகக் கொண்டவனுமான இறைவன், ஆன்மாக்களுக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு உலகத்துப் பிறவியேயாகும். பிறவியைப் பரிசாகக் கொடுத்த அந்த வள்ளலாகிய இறைவன், அந்தப் பிறவியில் உயிர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளையும் வினைகளையும் அடைவதற்காகப் பலவகைக் குணங்களையும் வைத்து அருளுகின்றான். அந்தக் குணங்களையும் கடந்து தம்மையே சிந்திக்கும் அடியவர்களுக்கு, திரிசடையைத் தலையில் தரித்த அந்த இறைவன், அவர்களின் சிந்தனையிலேயே பேரின்பமாகச் சேர்ந்திருந்து அருளுகின்றான்.

ஆன்மாக்கள் ஆசைக்கும் வினைக்கும் ஏற்பப் பிறவி எடுக்கும்போது அதற்கேற்ற உடலையும் உள்ளத்தையும் குணங்களையும் கொடுத்தருளும் இறைவன், தம் தலையில் திரித்துச் சூடிய சடை போல வினைகளால் முற்றும் சூழப்பட்டிருக்கும் ஆன்மாக்கள், அதைக் கடந்து தம்மை நினைக்கும்போது, அவர்களின் சிந்தனையில் பேரின்பமாக வந்து அருளுகின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    காளையை வாகனமாகக் கொண்டவனும், வேறுபட்ட பலவித உருவங்களில் ஒன்றாக இருப்பவனும், பூதகணங்களைப் படையாகக் கொண்டவனுமான இறைவன்,

  • வரி 2

    ஆன்மாக்களுக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு உலகத்துப் பிறவியேயாகும்.

  • வரி 3

    பிறவியைப் பரிசாகக் கொடுத்த அந்த வள்ளலாகிய இறைவன், அப்பிறவியில் உயிர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளையும் வினைகளையும் அடைவதற்காகப் பலவகைக் குணங்களையும் வைத்து அருளுகின்றான்.

  • வரி 4

    அந்தக் குணங்களையும் கடந்து தம்மையே சிந்திக்கும் அடியவர்களுக்கு, திரிசடையைத் தலையில் தரித்த இறைவன் அவர்களின் சிந்தனையிலேயே பேரின்பமாகச் சேர்ந்திருந்து அருளுகின்றான்.

திருமந்திரம் பாடல் #444

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout