திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 443

இரண்டாம் தந்திரம்13. அநுக்கிரகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்அசையில் உலகம் அதுவிது வாமே.

உரை

குயவன் களிமண்ணைப் பிடித்து, தன் மனதுக்கு எது நன்மை தரும் என்று தோன்றுகின்றதோ அந்த வடிவங்களிலெல்லாம் பாத்திரங்கள் வரும்படி வளைத்து உருவாக்குவான். அந்தக் குயவனைப் போலவே எம் குருநாதனாகிய இறைவனும், ஆன்மாக்களின் வேண்டுதலுக்கு இணங்கி, எதுவாக இருந்தால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்று அறிந்து, அதுவாகவே அவர்களை, அசைவற்ற இந்த அண்டசராசரத்துக்குள் அசைவு பெற்றுச் சுழலும் உலகங்களில் பல்வேறு வகை உயிர்களாகப் படைத்து அருளுகின்றான்.

உயிர்கள் உலகில் பிறப்பது அவற்றின் ஆசையினால்தான். ஆன்மாவாக இருக்கும் உயிர் ஆசைப்பட்டுவிடும்போது, இறைவனை வேண்டி, உயிர் எடுத்து உலகில் பிறக்கிறது. அப்படிப் பிறக்கும் உயிர் எந்த உருவில் இருந்தால் விரைவில் தன் ஆசைகளைத் தீர்த்து வினைகளையும் கழித்துக்கொள்ளும் என்று அறிந்த இறைவன், அந்த வடிவிலேயே அவர்களைப் படைத்து அருளுகின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    குயவன் களிமண்ணைப் பிடித்து தன் மனதுக்கு எது நன்மை தரும் என்று தோன்றுகின்றதோ அந்த வடிவங்களிலெல்லாம் பாத்திரங்கள் உருவாக்குவான்.

  • வரி 2

    தன் மனதில் நினைத்த வடிவங்கள் அனைத்தையும் அவன் வளைத்து வனைவான்.

  • வரி 3

    அந்தக் குயவனைப் போலவே எம் குருநாதனாகிய இறைவனும், ஆன்மாக்களின் வேண்டுதலுக்கு இணங்கி, எதுவாக இருந்தால் அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்று அறிகின்றான்.

  • வரி 4

    அறிந்தவாறே, அசைவற்ற இந்த அண்டசராசரத்துக்குள் அசைவு பெற்றுச் சுழலும் உலகங்களில் அவர்களைப் பல்வேறு வகை உயிர்களாகப் படைத்து அருளுகின்றான்.

திருமந்திரம் பாடல் #443

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout