தொடர்ந்து படிக்கread this section continuously
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தைநச்சியே இன்பங்கொள் வார்க்கு நமனில்லைவிச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கும்தச்சும் அவனேதான் சமைக்கவல் லானே.
உரைmeaning
தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒளிவீசித் திகழும் நாத வடிவமான இறைவனை அன்பு செய்து, அவனோடு சேர்ந்து பேரின்பம் உணர்ந்தவர்களுக்கு மரணம் என்பதே இல்லை என்பதால் எமனும் இல்லை. விரிந்து பரந்த இந்த உலகில் கண்களால் காணக்கூடிய சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவற்றின் மூவகை ஒளிகளையும் கொடுத்தருளிய அவனேதான், கண்களால் காணமுடியாத ஒளியாகச் சகஸ்ரதளத்தில் கலந்திருக்கின்றான். அந்த ஒளியை நாடி வருகின்றவர்களுக்குப் பேரின்பத்தை வழங்கி, மரணமில்லாத பெருவாழ்வை அருளக்கூடியவனாக இறைவன் இருக்கின்றான்.
Because there is no death at all for those who love and, joining with him, realize the supreme bliss of God, who shines forth as nada, luminous at the crown of the head in the sahasradala, there is no Yama for them either. The very God who has granted the three kinds of light, the light of the sun, the moon and fire, seen by the eyes in this vast, spread-out world, is himself present, mingled as light invisible to the eyes, in the sahasradala. God is the one able to grant supreme bliss and a great, deathless life to those who seek out and come toward that light.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் ஒளிவீசித் திகழும் நாத வடிவமான இறைவனை அன்பு செய்து,
For those who love the God who shines forth as nada, luminous at the crown of the head in the sahasradala,
- வரி 2Line 2
அவனோடு சேர்ந்து பேரின்பம் உணர்ந்தவர்களுக்கு மரணம் என்பதே இல்லை என்பதால் எமனும் இல்லை.
and, joining with him, realize supreme bliss, there is no death at all, and so there is no Yama for them either.
- வரி 3Line 3
விரிந்து பரந்த இந்த உலகில் கண்களால் காணக்கூடிய சூரியன், சந்திரன், நெருப்பு ஆகியவற்றின் மூவகை ஒளிகளையும் கொடுத்தருளிய அவனேதான்,
The very God who has granted the three kinds of light, the light of the sun, the moon and fire, seen by the eyes in this vast, spread-out world,
- வரி 4Line 4
கண்களால் காணமுடியாத ஒளியாகச் சகஸ்ரதளத்தில் கலந்திருக்கின்றான்; அந்த ஒளியை நாடி வருகின்றவர்களுக்குப் பேரின்பத்தையும் மரணமில்லாத பெருவாழ்வையும் அருளக்கூடியவனாக இருக்கின்றான்.
is himself present as light invisible to the eyes, mingled in the sahasradala, and is able to grant supreme bliss and a great, deathless life to those who seek out and come toward that light.
திருமந்திரம் பாடல் #442





