தொடர்ந்து படிக்கread this section continuously
ஆரும் அறியாதவ் வண்டத் திருவுருப்பார்முத லாகப் பயிலுங் கடத்திலேநீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்சோராமற் காணும் சுகமுமறிந் தேனே.
உரைmeaning
இறைவன் என்பவன் யாராலும் அறிந்துகொள்ள முடியாத, அண்டசராசரங்கள் அனைத்தும் அடங்கிய திருமேனியைக் கொண்டவன். நீரில் பால் சேர்க்கும்போது அவை இரண்டும் ஒன்றாகக் கலந்துவிடுவதைப் போல, உலகில் பிறக்கும் உயிர்களுடன் அவன் உயிராகக் கலந்து உடலாகி ஒன்றாக இருக்கின்றான். அதை இடைவிடாமல் கண்டு பேரின்பம் அடையும் பாக்கியத்தை அவனுடைய திருவருளால் நான் பெற்றிருக்கின்றேன்.
The Lord holds a sacred cosmic form in which all the worlds and beings are contained, a form that no one can ever come to know fully. Just as when milk is mixed into water the two merge and become one, so too he mingles as life with the lives born into this world and stands as one with them in body. By his grace I have won the fortune of seeing this without fail, and so have attained the great bliss of it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவன் என்பவன் யாராலும் அறிந்துகொள்ள முடியாத, அண்டசராசரங்கள் அனைத்தும் அடங்கிய திருமேனியைக் கொண்டவன்.
The Lord holds a sacred cosmic form in which all the worlds and beings are contained, a form that no one can ever come to know fully.
- வரி 2Line 2
நீரில் பால் சேர்க்கும்போது அவை இரண்டும் ஒன்றாகக் கலந்துவிடுவதைப் போல,
Just as when milk is mixed into water the two merge and become one,
- வரி 3Line 3
உலகில் பிறக்கும் உயிர்களுடன் அவன் உயிராகக் கலந்து உடலாகி ஒன்றாக இருக்கின்றான்.
so too he mingles as life with the lives born into this world and stands as one with them in body.
- வரி 4Line 4
அதை இடைவிடாமல் கண்டு பேரின்பம் அடையும் பாக்கியத்தை அவனுடைய திருவருளால் நான் பெற்றிருக்கின்றேன்.
By his grace I have won the fortune of seeing this without fail, and so have attained the great bliss of it.
திருமந்திரம் பாடல் #450





