உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியைஉள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனைஉள்ளமுந் தானும் உடனே இருக்கினும்உள்ளம் அவனது உருவறி யாதே.
இன்பப் பிறவி படைத்த இறைவனும்துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்என்பிற் கொளுவி இசைந்துறு தோல்தசைமுன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே.
இறையவன் மாதவன் இன்பம் படைத்தமறையவன் மூவரும் வந்துடன் கூடிஇறையவன் செய்த இரும்பொறி யாக்கைமறையவன் வைத்த பரிசறி யாரே.
காண்கின்ற கண்ணொளி காதல்செய் யீசனைஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியைப்பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்சேண்படு பொய்கையின் செயல்அணை யாரே.
தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்சுருளுஞ் சுடருறு தூவெஞ் சுடரும்இருளும் அறிநின் றிருட்டறை யாமே.
அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசைஉரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.
ஒளித்துவைத் தென்னுள் ளுறவுணர்ந் தீசன்வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டேகளிப்பொடுங் காதன்மை என்னும் பெருமைவெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்நன்றது செய்யும் மலர்மிசை மேலயன்என்றிவ ராகி இசைந்துஇருந் தானே.
ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்இருங்கரை மேலிருந் தின்புற நாடிவருங்கரை ஓரா வகையினிற் கங்கைஅருங்கரை பேணா தழுக்கது வாமே.
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனேகண்ணொன்று தான்பல காணும் தனைக்காணாஅண்ணலும் அவ்வண்ணமே ஆகிநின் றானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #431
1 / 10




