தொடர்ந்து படிக்கread this section continuously
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியைஉள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனைஉள்ளமுந் தானும் உடனே இருக்கினும்உள்ளம் அவனது உருவறி யாதே.
உரைmeaning
ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் கண்டு உணரக்கூடிய ஜோதி வடிவமாக இறைவன் வீற்றிருக்கின்றான். அவன் உயிர்களின் உள்ளத்தை விட்டு ஒரு அடி கூடத் தள்ளி நிற்பதில்லை. இவ்வாறு எப்போதும் உயிர்களின் உள்ளத்துடனேயே இறைவன் இருந்தாலும், மாயையால் மறைக்கப்பட்ட உயிர்களின் உள்ளம் அவனது உருவத்தை அறியவே அறியாது.
God dwells within the heart of every soul as a form of light that can be seen and realized. He does not stand apart from the heart of souls even by a single step. Though God is thus always joined with the heart of souls, the heart of souls, veiled by maya, does not know his form at all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் கண்டு உணரக்கூடிய ஜோதி வடிவமாக இறைவன் வீற்றிருக்கின்றான்.
God dwells within the heart of every soul as a form of light that can be seen and realized.
- வரி 2Line 2
அவன் உயிர்களின் உள்ளத்தை விட்டு ஒரு அடி கூடத் தள்ளி நிற்பதில்லை.
He does not stand apart from the heart of souls even by a single step.
- வரி 3Line 3
இவ்வாறு எப்போதும் உயிர்களின் உள்ளத்துடனேயே இறைவன் இருந்தாலும்,
Though God is thus always joined with the heart of souls,
- வரி 4Line 4
மாயையால் மறைக்கப்பட்ட உயிர்களின் உள்ளம் அவனது உருவத்தை அறியவே அறியாது.
the heart of souls, veiled by maya, does not know his form at all.
திருமந்திரம் பாடல் #431





