திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 430

தொடர்ந்து படிக்கread this section continuously

தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனைமாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டுகாயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே

உரை

இறைவனிடமிருந்து தோன்றிய ஆன்மா, தனது ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துக்கொள்ளச் செய்கின்ற செயல்களால் வினைகளைச் சேர்த்துக்கொள்கிறது. அந்த வினைகள் தீர்வதற்காக இறைவன் மாயையை வைத்து, ஆன்மாவிற்கு உடலையும் கொடுத்துப் பிறவி எடுக்க வைக்கின்றான். பிறவி எடுத்த ஆன்மா வினைச் சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக்கொண்டே இருக்கக் கூடாது என்கிற கருணையால், உலகத்தில் உள்ள அனைத்திலும் கலந்திருக்கும் அந்த இறைவன், தன்னை அடையும் வழிகளை அறிந்த, குருவாய் இருக்கும் அடியார்களோடு அதைச் சேரவைத்து, தன்னை எப்போதும் நினைக்கக்கூடிய எண்ணத்தை அதனுள் வைக்கின்றான். இறைவனுடைய சிந்தனையிலேயே இருப்பதால் மாயை அழிந்து, நான் என்கின்ற அகங்காரமும் அழிந்து, ஆன்மா மீண்டும் தன்னை வந்து அடையும் மெய்யுணர்வை இறைவன் வரச் செய்கிறான்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனிடமிருந்து தோன்றிய ஆன்மா, தனது ஆசைகளை அனுபவித்துத் தீர்த்துக்கொள்ளச் செய்கின்ற செயல்களால் வினைகளைச் சேர்த்துக்கொள்கிறது.

  • வரி 2

    அந்த வினைகள் தீர்வதற்காக இறைவன் மாயையை வைத்து, ஆன்மாவிற்கு உடலையும் கொடுத்துப் பிறவி எடுக்க வைக்கின்றான்.

  • வரி 3

    வினைச் சுழலில் சிக்கி மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கக் கூடாது என்கிற கருணையால், அனைத்திலும் கலந்திருக்கும் இறைவன், தன்னை அடையும் வழிகளை அறிந்த, குருவாய் இருக்கும் அடியார்களோடு ஆன்மாவைச் சேரவைக்கிறான்.

  • வரி 4

    தன்னை எப்போதும் நினைக்கக்கூடிய எண்ணத்தை அதனுள் வைக்க, மாயையும் நான் என்கின்ற அகங்காரமும் அழிந்து, ஆன்மா மீண்டும் தன்னை வந்து அடையும் மெய்யுணர்வை இறைவன் வரச் செய்கிறான்.

திருமந்திரம் பாடல் #430

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout