திருமூலர் அருளிய திருமந்திரம்
11. சங்காரம்

இரண்டாம் தந்திரம் பாடல் 421–430 (10 பாடல்கள்)

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதுஅங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதுஅங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதுஅங்கியவ் வீசருக்கு கைஅம்பு தானே.

இலயங்கள் மூன்றினும் ஒன்றுகற் பாந்தநிலையன் றிழிந்தமை நின்றுணர்ந் தேனால்உலைதந்த மெல்லரி போலும் உலகம்மலைதந்த மாநிலம் தான்வெந் ததுவே.

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசவிதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடிஅண்டத்துள் ஊறி யிருந்தெண் திசையாதிஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக்குண்டத்தின் மேல்அங்கியும் கோலிக்கொண் டானே.

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்சுத்தசங் காரத் தொழிலற்ற கேவலம்உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்உய்த்தசங் காரஞ் சிவனருள் உண்மையே.

நித்தசங் காரங் கருஇடர் நீக்கினால்ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்வைத்தசங் காரம் கேவலம் ஆன்மாவுக்குஉய்த்தசங் காரம் சிவமாகும் உண்மையே.

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றுதல்வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்சுத்தசங் காரமுந் தோயாப் பரனருள்வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே.

பாழே முதலா எழும்பயிர் அவ்விடம்பாழே அடங்கினும் பண்டைப்பாழ் ஆகாவாம்வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.

தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனைமாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டுகாயம்வைத் தாங்கலந் தெங்கும் நினைப்பதோர்ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #421

1 / 10

0:000:00
11. சங்காரம்பாடல் 421

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com