திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 428

தொடர்ந்து படிக்கread this section continuously

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றுதல்வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்சுத்தசங் காரமுந் தோயாப் பரனருள்வைத்தசங் காரமும் நாலாம் மதிக்கிலே.

உரை

உயிர்கள் தமது துன்பங்களை மறந்து நீண்ட நேரம் இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையால் நித்த சங்காரம் நிகழ்கின்றது. ஆரம்பமில்லாத கனவு நிலையில் உலக மாயைகள் அனைத்தும் மறைந்து எண்ணங்களும் இன்றி உயிர்கள் சிறிது நேரம் இளைப்பாற வேண்டும் என்கிற கருணையால் வைத்த சங்காரம் நிகழ்கின்றது. இறைவனது திருவருளை மட்டுமே எண்ணி மற்ற அனைத்தையும் விட்டு விலகி ஆன்மா திரும்ப வர வேண்டும் என்கிற கருணையால் சுத்த சங்காரம் நிகழ்கின்றது. வினைகளையெல்லாம் கழித்த ஆன்மா இனித் தனித்தன்மை இன்றி உண்மைப் பொருளாகிய இறைவனுடனே கலந்துவிட வேண்டும் என்கிற கருணையால் உய்த்த சங்காரம் நிகழ்கின்றது. இறைவனது கருணையை மதித்துப் பார்த்தால், இந்த நான்கு சங்காரங்களும் உயிர்களின் நன்மைக்காகவே இறைவன் வைத்திருக்கின்றான் என்பது தெரியும்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிர்கள் தமது துன்பங்களை மறந்து நீண்ட நேரம் இளைப்பாற வேண்டும் என்கிற இறைவனது கருணையால் நித்த சங்காரம் நிகழ்கின்றது.

  • வரி 2

    ஆரம்பமில்லாத கனவு நிலையில் உலக மாயைகள் அனைத்தும் மறைந்து எண்ணங்களும் இன்றி உயிர்கள் சிறிது நேரம் இளைப்பாற வேண்டும் என்கிற கருணையால் வைத்த சங்காரம் நிகழ்கின்றது.

  • வரி 3

    இறைவனது திருவருளை மட்டுமே எண்ணி மற்ற அனைத்தையும் விட்டு விலகி ஆன்மா திரும்ப வர வேண்டும் என்கிற கருணையால் சுத்த சங்காரம் நிகழ்கின்றது.

  • வரி 4

    வினைகளையெல்லாம் கழித்த ஆன்மா இனித் தனித்தன்மை இன்றி இறைவனுடனே கலந்துவிட வேண்டும் என்கிற கருணையால், நான்காவதாக, உய்த்த சங்காரம் நிகழ்கின்றது; இந்த நான்கு சங்காரங்களும் உயிர்களின் நன்மைக்காகவே இறைவன் வைத்திருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #428

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout