தொடர்ந்து படிக்கread this section continuously
கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடிஅண்டத்துள் ஊறி யிருந்தெண் திசையாதிஒன்றின் பதஞ்செய்த ஓம்என்ற அப்புறக்குண்டத்தின் மேல்அங்கியும் கோலிக்கொண் டானே.
உரைmeaning
மழைநீரைத் தாங்கிய கருத்த மேகங்கள் காற்றால் தள்ளப்பட்டு மலைகளில் மழையாகப் பொழிந்து, அந்த மழை அருவியாகி அருவி ஆறாகி, ஆறு எட்டுத் திசைகளிலும் உள்ள நிலங்களில் எல்லாம் பரவி, ஆற்று நீர் நிலத்தில் ஊறி உயிர்களைக் காக்கும் அனைத்து வகை உணவுப் பொருள்களையும் விளைவித்து, பின் அதே ஆற்று நீர் கடலில் கலந்து பெருங்கடலாக உருவெடுத்து நிலங்களையெல்லாம் சூழ்ந்து கிடக்கும். வினையின்படி நன்மைக்காக இறைவன் தனது சக்தியை ஓம் என்னும் மந்திரமாகப் பதம் செய்து, யாகக் குண்டத்தின் மேல் எழும்பும் சிறிய நெருப்பால் அழித்துத் தன்னுள் அடக்கிக் கொள்கின்றான்.
நல்வினையின் காரணமாகவே கருத்த மேகங்கள் அழிந்து மழையாகப் பொழிகின்றன. அந்த மழைநீர் நிலங்களெங்கும் பரவி உணவுப் பொருள்களை விளைவித்து அழிந்துபோகின்றது. மீதமிருக்கும் நல்ல மழைநீர் கடலில் கலந்து அழிந்து உப்புநீராகின்றது. அந்த நீரும் மீண்டும் அழிந்து கருத்த நீரைக் கொண்ட மேகமாகின்றது. இப்படி உலகில் நிகழும் பல அழிவுகளும், உலக நன்மைக்காக இறைவன் ஓம் என்னும் மந்திரத்தைப் பதம் செய்து, உலகம் என்னும் குண்டத்தில் அக்னியை உருவாக்கிச் செய்வனவே.
The dark clouds that hold rainwater, pushed by the wind, pour down as rain on the mountains; that rain becomes a stream, the stream becomes a river, and the river spreads through the lands in all eight directions; the river's water seeps into the soil and brings forth every kind of food that protects living beings; and then that same water mingles with the sea, takes shape as the great ocean, and lies encircling all the lands. For the good that comes by way of their deeds, God matures his own power into the mantra Om, and destroys through the small fire that rises above the sacrificial pit, drawing it back within himself.
It is by good deeds themselves that the dark clouds are destroyed and fall as rain. That rainwater spreads through the lands and is destroyed as it brings forth food. What good rainwater remains mingles with the sea and is destroyed, becoming salt water. That water too is destroyed again and becomes cloud carrying dark water. In this way, the many destructions that occur in the world are all wrought by God maturing the mantra Om and kindling fire in that cauldron called the world, for the world's good.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
மழைநீரைத் தாங்கிய கருத்த மேகங்கள் காற்றால் தள்ளப்பட்டு மலைகளில் மழையாகப் பொழிந்து அருவியாகி ஆறாகின்றன.
The dark clouds that hold rainwater, pushed by the wind, pour down as rain on the mountains and become a stream, then a river.
- வரி 2Line 2
அந்த ஆறு எட்டுத் திசைகளிலும் உள்ள நிலங்களில் பரவி, நிலத்தில் ஊறி உயிர்களைக் காக்கும் உணவுப் பொருள்களை விளைவிக்கின்றது.
That river spreads through the lands in all eight directions, seeps into the soil, and brings forth the food that protects living beings.
- வரி 3Line 3
அந்த ஆற்று நீர் பின் கடலில் கலந்து பெருங்கடலாகும்; வினையின்படி நன்மைக்காக இறைவன் தனது சக்தியை ஓம் என்னும் மந்திரமாகப் பதம் செய்கின்றான்.
That river water then mingles with the sea and becomes the great ocean; and for the good that comes by way of deeds, God matures his own power into the mantra Om.
- வரி 4Line 4
யாகக் குண்டத்தின் மேல் எழும்பும் சிறிய நெருப்பால் அழித்துத் தன்னுள் அடக்கிக் கொள்கின்றான் இறைவன்.
God destroys through the small fire that rises above the sacrificial pit and draws it back within himself.
திருமந்திரம் பாடல் #424





