தொடர்ந்து படிக்கread this section continuously
பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம்குதஞ்செய்யும் அங்கி கொளுவியா காசவிதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.
உரைmeaning
உயிர்களுக்கு வேண்டிய இயற்கை வளங்களை வழங்கி அவற்றை வாழவைக்கும் இந்த உலகமும், பனி படர்ந்து ஓங்கி நிற்கும் எட்டு வகை மலைகளும், ஓசை எழுப்பும் அலைகளைக் கொண்ட ஏழு வகைக் கடல்களின் வெள்ளப் பெருக்கும் ஆகிய இவை அனைத்தும், இறைவனின் சிறிதளவு நெருப்பினால் அழிந்து ஆகாயம் போல வெற்றிடமாகிவிடும் விதத்தைக் கண்ட உண்மை ஞானிகளுக்கு அது வியப்பாக இராது.
This world, which grants living beings the natural bounty by which they live, the eight kinds of snow-laden, towering mountains, and the flooding surge of the seven kinds of seas with their roaring waves, all of these perish through even a small measure of God's fire and become void like the sky; and true sages who have seen this happen are not surprised by it.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களுக்கு வேண்டிய இயற்கை வளங்களை வழங்கி வாழவைக்கும் இந்த உலகமும், பனி படர்ந்து ஓங்கி நிற்கும் எட்டு வகை மலைகளும்,
This world, which grants living beings the natural bounty by which they live, and the eight kinds of snow-laden, towering mountains,
- வரி 2Line 2
ஓசை எழுப்பும் அலைகளைக் கொண்ட ஏழு வகைக் கடல்களின் வெள்ளப் பெருக்கும் ஆகிய இவை அனைத்தும்,
and the flooding surge of the seven kinds of seas with their roaring waves, all of these,
- வரி 3Line 3
இறைவனின் சிறிதளவு நெருப்பினால் அழிந்து ஆகாயம் போல வெற்றிடமாகிவிடும்;
perish through even a small measure of God's fire and become void like the sky;
- வரி 4Line 4
இந்த விதத்தைக் கண்ட உண்மை ஞானிகளுக்கு அது வியப்பாக இராது.
and true sages who have seen this happen are not surprised by it.
திருமந்திரம் பாடல் #423





