புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்தானே உலகினில் தலைவனு மாமே.
உடலாய் உயிராய் உலகம தாகிக்கடலாய் கார்முகில் நீர்பொழியும் வானாய்இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகிஅடையார் பெருவழி அண்ணல்நின் றானே.
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடலுயிர்கூடு மரபிற் குணஞ்செய்து மாநந்திஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்றுநாடும் வழக்கமும் நானுமறிந் தேனே.
தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்தானொரு காலந்தண் மாயவனு மாமே.
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்அன்புற ஐந்திலும் அமர்ந்துநின் றானே.
உற்று வனைவான் அவனே உலகினைப்பெற்று வனைவான் அவனே பிறவியைச்சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதைமற்றதும் அவனே வனையவல் லானே.
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்திவெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளிஉள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்தள்ளுயி ராதவண்ணந் தாங்கிநின் றானே.
தாங்கருந் ..தன்மையுந் தானவை பல்லுயிர்வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லைஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழிதாங்கிநின் றானும்அத் தாரணியன் தானே.
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடிநணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்பணியினும் பார்மிசைப் பல்லுயி ராகித்தணியினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #411
1 / 10




