தொடர்ந்து படிக்கread this section continuously
உற்று வனைவான் அவனே உலகினைப்பெற்று வனைவான் அவனே பிறவியைச்சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதைமற்றதும் அவனே வனையவல் லானே.
உரைmeaning
உயிர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் உயிர்களைப் பல்வேறு உலகங்களிலும் உருவாக்குபவன் இறைவனே. அவனே உயிர்களின் வினைப்பயனைப் பெற்று, அதன் காரணமாகப் பிறவியை உருவாக்குபவனும் ஆவான். ஒரு குயவன் தனது அச்சுச் சக்கரத்தில் களிமண்ணை வைத்துச் சுற்றி, அந்தக் களிமண்ணைப் பிடித்துத் தாழியும் குடமும் சிறு பாண்டங்களும் பலவிதமான மண் பாத்திரங்களும் செய்வதைப்போல, இறைவன் உயிர்களின் வினைகளுக்கு ஏற்பப் பல்வேறு விதமான உடல்களை வடித்து அருளும் வல்லமை உள்ளவன் ஆவான்.
It is God who, out of the wish that souls must come into being, brings souls into being in the various worlds. It is he who receives the fruit of a soul's action and, as the reason for it, brings its birth into being. Just as a potter places clay on his wheel, spins it, and holding that clay shapes jars, pots, small vessels and many kinds of earthen vessels, so too God has the power to graciously shape different kinds of bodies to suit the actions of souls.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் உயிர்களைப் பல்வேறு உலகங்களிலும் உருவாக்குபவன் இறைவனே.
It is God who, out of the wish that souls must come into being, brings souls into being in the various worlds.
- வரி 2Line 2
அவனே உயிர்களின் வினைப்பயனைப் பெற்று, அதன் காரணமாகப் பிறவியை உருவாக்குபவனும் ஆவான்.
It is he who receives the fruit of a soul's action and, as the reason for it, brings its birth into being.
- வரி 3Line 3
ஒரு குயவன் தனது அச்சுச் சக்கரத்தில் களிமண்ணை வைத்துச் சுற்றி, அந்தக் களிமண்ணைப் பிடித்துத் தாழியும் குடமும் சிறு பாண்டங்களும் பலவிதமான மண் பாத்திரங்களும் செய்வதைப்போல,
Just as a potter places clay on his wheel, spins it, and holding that clay shapes jars, pots, small vessels and many kinds of earthen vessels,
- வரி 4Line 4
இறைவன் உயிர்களின் வினைகளுக்கு ஏற்பப் பல்வேறு விதமான உடல்களை வடித்து அருளும் வல்லமை உள்ளவன் ஆவான்.
so too God has the power to graciously shape different kinds of bodies to suit the actions of souls.
திருமந்திரம் பாடல் #417





