திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 416

தொடர்ந்து படிக்கread this section continuously

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்அன்புற ஐந்திலும் அமர்ந்துநின் றானே.

உரை

அனைத்து உயிர்களுக்குள்ளும் தோன்றும் உண்மையான அன்பாகவும் அறிவாகவும், அவை பெறும் ஒழுக்கமான அடக்கமாகவும் இருப்பவன் இறைவனே. நல்வினையால் உயிர்கள் பெறும் இன்பமாகவும், இன்பத்தில் மற்ற உயிர்களோடு கலக்கும் கலவியாகவும் இருப்பவன் இறைவனே. உலகம் உருவான ஆதிகாலமாகவும், அந்த உலகம் இறுதியில் அழியும் ஊழிக் காலமாகவும் இருப்பவன் இறைவனே. அவனே உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் அன்பினால் ஐந்து பூதங்களிலும் அமர்ந்திருந்து, உயிர்களை எப்போதும் காத்து அருளுகின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உயிர்களுக்குள்ளும் தோன்றும் உண்மையான அன்பாகவும் அறிவாகவும், அவை பெறும் ஒழுக்கமான அடக்கமாகவும் இருப்பவன் இறைவனே.

  • வரி 2

    நல்வினையால் உயிர்கள் பெறும் இன்பமாகவும், இன்பத்தில் மற்ற உயிர்களோடு கலக்கும் கலவியாகவும் இருப்பவன் இறைவனே.

  • வரி 3

    உலகம் உருவான ஆதிகாலமாகவும், அந்த உலகம் இறுதியில் அழியும் ஊழிக் காலமாகவும் இருப்பவன் இறைவனே.

  • வரி 4

    அவனே உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் அன்பினால் ஐந்து பூதங்களிலும் அமர்ந்திருந்து, உயிர்களை எப்போதும் காத்து அருளுகின்றான்.

திருமந்திரம் பாடல் #416

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout