திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 415

தொடர்ந்து படிக்கread this section continuously

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்தானொரு காலந்தண் மாயவனு மாமே.

உரை

இறைவன் ஒருவனே ஆதிகாலத்திலிருந்தே மாபெரும் தனிச்சுடர் கொண்ட பேரொளியாய் நிற்கின்றான். அழிக்கின்ற காலத்தில் சூராவளிப் புயலாக இருக்கின்றான். உயிர்களை வாழ்விக்கின்ற காலத்தில் குளிர்ச்சியுடைய மழையாய் வருகின்றான். காலத்திற்கு ஏற்ப உருவம் கொண்டு உயிர்களைக் காப்பாற்றும் திருமாலின் தன்மையாகவும் அவனே இருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவன் ஒருவனே ஆதிகாலத்திலிருந்தே மாபெரும் தனிச்சுடர் கொண்ட பேரொளியாய் நிற்கின்றான்.

  • வரி 2

    அழிக்கின்ற காலத்தில் சூராவளிப் புயலாக இருக்கின்றான்.

  • வரி 3

    உயிர்களை வாழ்விக்கின்ற காலத்தில் குளிர்ச்சியுடைய மழையாய் வருகின்றான்.

  • வரி 4

    காலத்திற்கு ஏற்ப உருவம் கொண்டு உயிர்களைக் காப்பாற்றும் திருமாலின் தன்மையாகவும் அவனே இருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #415

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout