தொடர்ந்து படிக்கread this section continuously
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடலுயிர்கூடு மரபிற் குணஞ்செய்து மாநந்திஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்றுநாடும் வழக்கமும் நானுமறிந் தேனே.
உரைmeaning
உயிர்கள் தேடிப் பார்க்கக்கூடிய எட்டுத் திசைகளிலும் பிறவி எடுத்திருக்கும் பல ஆன்மாக்கள் கூடி நிற்கின்ற உடல்களின் உயிராக இருக்கின்றவன் மாபெரும் குருவான இறைவன். அப்படிக் கூடுகின்ற காரணமான வினைப் பயனாகவும் அவனே இருக்கின்றான். அவனே உயிர்களின் உள்ளத்துக்குள் மனசாட்சியாய் நின்று, அவற்றின் வினைப் பயனுக்கு ஏற்ப அவை அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் விருப்பும் வெறுப்பும் இருக்கும் முறையையும், அவனது கருணையினால் யான் அறிந்தேன்.
God, the great Guru, is present, in all the eight directions that souls may search and see, as the life within the bodies in which many souls that have taken birth come together to dwell. He himself is also the fruit of action that is the reason they come together so. He himself stands within the hearts of souls as the witness of the mind, and by his grace I have come to know the way in which, according to the fruit of their actions, they experience pleasure and pain, and liking and dislike.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்கள் தேடிப் பார்க்கக்கூடிய எட்டுத் திசைகளிலும் பிறவி எடுத்திருக்கும் பல ஆன்மாக்கள் கூடி நிற்கின்ற உடல்களின் உயிராக இருக்கின்றவன் மாபெரும் குருவான இறைவன்.
God, the great Guru, is present, in all the eight directions that souls may search and see, as the life within the bodies in which many souls that have taken birth come together to dwell.
- வரி 2Line 2
அப்படிக் கூடுகின்ற காரணமான வினைப் பயனாகவும் அவனே இருக்கின்றான்.
He himself is also the fruit of action that is the reason they come together so.
- வரி 3Line 3
அவனே உயிர்களின் உள்ளத்துக்குள் மனசாட்சியாய் நின்று,
He himself stands within the hearts of souls as the witness of the mind,
- வரி 4Line 4
அவற்றின் வினைப் பயனுக்கு ஏற்ப அவை அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் விருப்பும் வெறுப்பும் இருக்கும் முறையையும், அவனது கருணையினால் யான் அறிந்தேன்.
and by his grace I have come to know the way in which, according to the fruit of their actions, they experience pleasure and pain, and liking and dislike.
திருமந்திரம் பாடல் #414





