தொடர்ந்து படிக்கread this section continuously
உடலாய் உயிராய் உலகம தாகிக்கடலாய் கார்முகில் நீர்பொழியும் வானாய்இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகிஅடையார் பெருவழி அண்ணல்நின் றானே.
உரைmeaning
உலகத்தைப் படைத்து அதனைக் காக்க, அனைத்து உயிர்களின் உடலாகவும் சூட்சுமத்தில் உயிராகவும், அவை பிறந்து வாழும் அனைத்து உலகங்களாகவும் இறைவன் நிற்கின்றான். உயிர் தோன்ற வழி செய்யும் கடல்களாகவும், உயிர்கள் வாழ வழி செய்யும் மழைநீரைப் பொழியும் கருத்த மேகங்களைக் கொண்ட வானமாகவும் அவனே இருக்கின்றான். வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் வெற்றிட ஆகாயமாகவும், அனைத்தும் தானே ஆகவும் இருக்கின்றான். உண்மையான அடியவர்கள் தேடி அடையும் முக்தியாகவும் இறைவன் ஒருவனே நிற்கின்றான்.
To create the world and to protect it, God stands as the body of every soul and, in its subtlety, as its life, and as all the worlds in which they are born and live. He himself is the seas that provide the way for life to arise, and the sky with its dark clouds that pour the rain that provides the way for those lives to live. He is the empty space of ether that lies between the sky and the earth, and he himself is everything. And it is the one God alone who stands as the liberation that true devotees seek and reach.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகத்தைப் படைத்து அதனைக் காக்க, அனைத்து உயிர்களின் உடலாகவும் சூட்சுமத்தில் உயிராகவும், அவை பிறந்து வாழும் அனைத்து உலகங்களாகவும் இறைவன் நிற்கின்றான்.
To create the world and to protect it, God stands as the body of every soul and, in its subtlety, as its life, and as all the worlds in which they are born and live.
- வரி 2Line 2
உயிர் தோன்ற வழி செய்யும் கடல்களாகவும், உயிர்கள் வாழ வழி செய்யும் மழைநீரைப் பொழியும் கருத்த மேகங்களைக் கொண்ட வானமாகவும் அவனே இருக்கின்றான்.
He himself is the seas that provide the way for life to arise, and the sky with its dark clouds that pour the rain that provides the way for those lives to live.
- வரி 3Line 3
வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் வெற்றிட ஆகாயமாகவும், அனைத்தும் தானே ஆகவும் இருக்கின்றான்.
He is the empty space of ether that lies between the sky and the earth, and he himself is everything.
- வரி 4Line 4
உண்மையான அடியவர்கள் தேடி அடையும் முக்தியாகவும் இறைவன் ஒருவனே நிற்கின்றான்.
And it is the one God alone who stands as the liberation that true devotees seek and reach.
திருமந்திரம் பாடல் #413





