தொடர்ந்து படிக்கread this section continuously
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்தானே உலகினில் தலைவனு மாமே.
உரைmeaning
உலகத்தைப் படைத்து அதனைக் காக்க, இறைவன் ஒருவனே பத்துத் திசைகளாகவும் (எட்டுத் திசைகள், மேல், கீழ்), அவற்றைக் காத்து நிற்கும் தேவர்களாகவும் இருக்கின்றான். அனைத்து உயிர்களின் ஸ்தூல உடலாகவும் சூட்சும உயிராகவும், அவை இரண்டும் உணர்த்தும் தத்துவங்களாகவும் அவனே இருக்கின்றான். காணுகின்ற கடல் போன்ற நீர்நிலைகளாகவும், மலை போன்ற நிலப் பரப்புகளாகவும், அனைத்திற்கும் முதலாகவும் இருக்கின்றான். உலகத்திலுள்ள அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான்.
To create the world and to protect it, it is the one God who becomes the ten directions themselves (the eight directions, above, and below), and the gods who stand guarding them. He himself is the gross body and the subtle life of every soul, and the tattvas that these two point to. He is the seen bodies of water like the sea, the stretches of land like mountains, and the first of all things. And he is the lord of everything that is in the world.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உலகத்தைப் படைத்து அதனைக் காக்க, இறைவன் ஒருவனே பத்துத் திசைகளாகவும் (எட்டுத் திசைகள், மேல், கீழ்), அவற்றைக் காத்து நிற்கும் தேவர்களாகவும் இருக்கின்றான்.
To create the world and to protect it, it is the one God who becomes the ten directions themselves (the eight directions, above, and below), and the gods who stand guarding them.
- வரி 2Line 2
அனைத்து உயிர்களின் ஸ்தூல உடலாகவும் சூட்சும உயிராகவும், அவை இரண்டும் உணர்த்தும் தத்துவங்களாகவும் அவனே இருக்கின்றான்.
He himself is the gross body and the subtle life of every soul, and the tattvas that these two point to.
- வரி 3Line 3
காணுகின்ற கடல் போன்ற நீர்நிலைகளாகவும், மலை போன்ற நிலப் பரப்புகளாகவும், அனைத்திற்கும் முதலாகவும் இருக்கின்றான்.
He is the seen bodies of water like the sea, the stretches of land like mountains, and the first of all things.
- வரி 4Line 4
உலகத்திலுள்ள அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான்.
And he is the lord of everything that is in the world.
திருமந்திரம் பாடல் #412





