திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 411

தொடர்ந்து படிக்கread this section continuously

புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே.

உரை

உயிரின் உடலில் புகுந்து நிலையாய் நின்ற இறைவன், அவ்வுயிரின் அருள் அறிவு என்னும் வெளிச்சமாகவும், அறியாமை என்னும் இருளாகவும் இருக்கின்றான். அவ்வுயிருக்குக் கிடைக்கும் புகழ்ச்சியாகவும் இகழ்ச்சியாகவும் அவனே இருக்கின்றான். அவ்வுயிரின் உடலாகவும் உயிராகவும் ஒன்றி நிற்கின்றான். அவ்வுயிரின் அறிவாகவும் நிரந்தரமாகக் கலந்து, அது வாழும் காலம் வரை அருளுகின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    உயிரின் உடலில் புகுந்து நிலையாய் நின்ற இறைவன், அவ்வுயிரின் அருள் அறிவு என்னும் வெளிச்சமாகவும், அறியாமை என்னும் இருளாகவும் இருக்கின்றான்.

  • வரி 2

    அவ்வுயிருக்குக் கிடைக்கும் புகழ்ச்சியாகவும் இகழ்ச்சியாகவும் அவனே இருக்கின்றான்.

  • வரி 3

    அவ்வுயிரின் உடலாகவும் உயிராகவும் ஒன்றி நிற்கின்றான்.

  • வரி 4

    அவ்வுயிரின் அறிவாகவும் நிரந்தரமாகக் கலந்து, அது வாழும் காலம் வரை அருளுகின்றான்.

திருமந்திரம் பாடல் #411

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout