திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 410

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆதித்தன் சந்திரன் அங்கி எண்பாலர்கள்போதித்த வானொலி பொங்கெரி நீர்புவிவாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.

உரை

சூரியனும் சந்திரனும் அக்கினியும், எட்டுத் திசைகளையும் காக்கும் எண்மரும், போதனை செய்யும் ஆகாயம், ஒலியைப் பரப்பும் காற்று, சுட்டெரிக்கும் நெருப்பு, நீர் இருக்கும் பூமி ஆகிய ஐம்பெரும் பூதங்களும், அறிவைத் தரும் ஐந்து ஞானேந்திரியங்களும், செயலைச் செய்யும் ஐந்து கர்மேந்திரியங்களும், நான்கு அந்தக்கரணங்களும், இவை அனைத்தும் அசையாத சக்தியும் அசையும் சக்தியும் தோற்றுவித்த சுத்த மாயையிலும் அசுத்த மாயையிலும் இருந்தே தோன்றியவையாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    சூரியனும் சந்திரனும் அக்கினியும், எட்டுத் திசைகளையும் காக்கும் எண்மரும்,

  • வரி 2

    போதனை செய்யும் ஆகாயம், ஒலியைப் பரப்பும் காற்று, சுட்டெரிக்கும் நெருப்பு, நீர் இருக்கும் பூமி ஆகிய ஐம்பெரும் பூதங்களும்,

  • வரி 3

    அறிவைத் தரும் ஐந்து ஞானேந்திரியங்களும், செயலைச் செய்யும் ஐந்து கர்மேந்திரியங்களும், நான்கு அந்தக்கரணங்களும்,

  • வரி 4

    இவை அனைத்தும் அசையாத சக்தியும் அசையும் சக்தியும் தோற்றுவித்த சுத்த மாயையிலும் அசுத்த மாயையிலும் இருந்தே தோன்றியவையாகும்.

திருமந்திரம் பாடல் #410

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout