திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 409

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்அப்பரி சேதென்று புகலும் மனிதர்அப்பரி சேஇருளாய் மூடிநின் றாரே.

உரை

இறைவன் உலகத்தில் பரிசாகக் கொடுத்தது எண்பத்து நான்கு இலட்சம் வகை உயிரினங்களாகும். இந்த அனைத்து உயிர்களிலும் உண்மையான பரிசாக அவற்றுடன் கலந்து உயிராக நிற்பது இறைவனே ஆகும். ஆனால் இறைவனைத் தமக்குள் அறியாமல், ஆணவத்தால் அவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்கும் மனிதர், உயிர்களுக்குப் பரிசாய் இருக்கும் அந்த இறைவனே மாயை என்னும் ஆணவ இருளால் அவனை மூடியிருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவன் உலகத்தில் பரிசாகக் கொடுத்தது எண்பத்து நான்கு இலட்சம் வகை உயிரினங்களாகும்.

  • வரி 2

    இந்த அனைத்து உயிர்களிலும் உண்மையான பரிசாக அவற்றுடன் கலந்து உயிராக நிற்பது இறைவனே ஆகும்.

  • வரி 3

    ஆனால் இறைவனைத் தமக்குள் அறியாமல், ஆணவத்தால் அவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்கும் மனிதர்,

  • வரி 4

    உயிர்களுக்குப் பரிசாய் இருக்கும் அந்த இறைவனே மாயை என்னும் ஆணவ இருளால் அவனை மூடியிருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #409

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout