திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 418

தொடர்ந்து படிக்கread this section continuously

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்திவெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளிஉள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்தள்ளுயி ராதவண்ணந் தாங்கிநின் றானே.

உரை

அனைத்து உயிர்களுக்கும் உள்ளிருக்கும் உயிராகவும், வெளியிலிருக்கும் உடலாகவும், மூச்சுக்காற்றாகவும் நிற்கின்றான் நந்தியாகிய இறைவன். கர்மவினைகள் சூழ்ந்த அசுத்த மாயையில் இருக்கும் உலக உயிர்களையும், கர்மவினைகள் இல்லாத சுத்த மாயையில் இருக்கும் தேவர்களையும் தாண்டிய பரவெளியில், உண்மைப் பொருளை உணர வைக்கும் பேரொளியாகக் குருவாய் நின்று அருளுகின்றான். அனைத்து உயிர்களுக்குள் உயிராகவும் உணர்வாகவும் அவற்றின் உடலுக்குள் பரவியிருந்து, அந்த உயிர்களின் மூச்சுக்காற்று உடலைவிட்டுச் செல்லாதபடி, உடலையும் உயிரையும் உள்ளிருந்து தாங்கிக் கொண்டு நிற்பவனும் இறைவனே.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உயிர்களுக்கும் உள்ளிருக்கும் உயிராகவும், வெளியிலிருக்கும் உடலாகவும், மூச்சுக்காற்றாகவும் நிற்கின்றான் நந்தியாகிய இறைவன்.

  • வரி 2

    கர்மவினைகள் சூழ்ந்த அசுத்த மாயையில் இருக்கும் உலக உயிர்களையும், கர்மவினைகள் இல்லாத சுத்த மாயையில் இருக்கும் தேவர்களையும் தாண்டிய பரவெளியில், உண்மைப் பொருளை உணர வைக்கும் பேரொளியாகக் குருவாய் நின்று அருளுகின்றான்.

  • வரி 3

    அனைத்து உயிர்களுக்குள் உயிராகவும் உணர்வாகவும் அவற்றின் உடலுக்குள் பரவியிருந்து,

  • வரி 4

    அந்த உயிர்களின் மூச்சுக்காற்று உடலைவிட்டுச் செல்லாதபடி, உடலையும் உயிரையும் உள்ளிருந்து தாங்கிக் கொண்டு நிற்பவனும் இறைவனே.

திருமந்திரம் பாடல் #418

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout