தொடர்ந்து படிக்கread this section continuously
இன்பப் பிறவி படைத்த இறைவனும்துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்என்பிற் கொளுவி இசைந்துறு தோல்தசைமுன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே.
உரைmeaning
இறைவனுடன் இருந்த ஆன்மாக்கள் ஆசைப்பட்டுவிடும்போது, அந்த ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டியே அவற்றை உலகில் பிறவி எடுக்கும்படி உயிர்களாகப் படைக்கின்றான் இறைவன். அந்த உயிர்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளும்போது சில வினைகளும் சேர்ந்துவிடுகின்றன. இந்த வினைகளை அனுபவிக்கும்படி, உலகப் பற்று, குடும்பம், பாசம் என்னும் துயரத்துக்குள் இறைவன் உயிர்களை மாயையால் பூட்டி அடைத்துவிடுகின்றான். எலும்பை முழுவதும் தோலும் தசையும் மூடி, அந்த எலும்போடு ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் இந்த உலக உடம்பானது, பிறவிக்குக் காரணமான வினைகள் தீரும் வரை ஒன்றாகச் சேர்ந்திருக்கும். அந்தப் பிறவியின் வினைகள் முடிந்ததும் அது உயிரையும் முடிப்பதாக ஆகின்றது.
ஆன்மாக்கள் ஆசையினால் இன்பம் பெறுவதற்காகவே பிறவி எடுக்கின்றன என்பதால், அந்த இன்பத்தை அனுபவித்துத் தீர்க்கும் வரை பேரின்பத்தை மறைத்து அருள்கின்றான் இறைவன். அந்த ஆன்மாக்கள் எடுத்த பிறவியில் இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் வினைகளையும், அதன் விளைவால் ஏற்படும் துன்பத்தையும், அந்தத் துன்பத்திற்குக் காரணமான உலகப் பற்றுக்களையும் சேர்த்து பிறவிக்குள் அடைத்துவிடுகின்றான். இதில், எலும்பும் தோலும் போர்த்திய உடலே சிறையாகவும், உலகப் பற்று எனும் மாயை பூட்டாகவும், வினைகள் சாவியாகவும் இருக்கின்றது. உயிர்கள் தமது வினைகளை அனுபவித்துக் கழித்து முடிக்கும்போது இந்தப் பூட்டு திறந்து, அதுவரை ஆன்மா அனைத்தையும் அனுபவிக்க உதவிய உடலையும் உயிரையும் அழித்து ஆன்மா விடுதலை பெறுகின்றது.
When the souls who were with God begin to desire, God creates them as beings born in the world so that those desires may be fulfilled. As those souls fulfill their desires, certain deeds gather along with it. So that they may live out those deeds, God locks souls, through maya, within the sorrow called worldly attachment, family and bondage. This worldly body, in which skin and flesh entirely cover the bones and function joined with them, remains joined together until the deeds that caused the birth are spent. And once the deeds of that birth are finished, it brings the life itself to an end.
Because souls take birth by desire only to gain pleasure, God, in his grace, conceals supreme bliss from them until they have lived out and exhausted that pleasure. Within the birth those souls take, he locks together, into that birth, the deeds that come from experiencing pleasure, the suffering that follows from them, and the worldly attachments that cause that suffering. In this, the body wrapped in bone and skin is the prison, the maya called worldly attachment is the lock, and the deeds are the key. When souls live out and exhaust their deeds, this lock opens, and the soul, destroying the body and the life that had until then helped it experience everything in the world, gains its freedom.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவனுடன் இருந்த ஆன்மாக்கள் ஆசைப்பட்டுவிடும்போது, அந்த ஆசைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டியே அவற்றை உலகில் பிறவி எடுக்கும்படி உயிர்களாகப் படைக்கின்றான் இறைவன்.
When the souls who were with God begin to desire, God creates them as beings born in the world so that those desires may be fulfilled.
- வரி 2Line 2
அந்த வினைகளை அனுபவிக்கும்படி, உலகப் பற்று, குடும்பம், பாசம் என்னும் துயரத்துக்குள் இறைவன் உயிர்களை மாயையால் பூட்டி அடைத்துவிடுகின்றான்.
So that they may live out those deeds, God locks souls, through maya, within the sorrow called worldly attachment, family and bondage.
- வரி 3Line 3
எலும்பை முழுவதும் தோலும் தசையும் மூடி, அந்த எலும்போடு ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் இந்த உலக உடம்பு,
This worldly body, in which skin and flesh entirely cover the bones and function joined with them,
- வரி 4Line 4
பிறவிக்குக் காரணமான வினைகள் தீரும் வரை ஒன்றாகச் சேர்ந்திருந்து, அவை முடிந்ததும் உயிரையும் முடிப்பதாக ஆகின்றது.
remains joined together until the deeds that caused the birth are spent, and once they are finished, brings the life itself to an end.
திருமந்திரம் பாடல் #432





