திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 439

தொடர்ந்து படிக்கread this section continuously

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்இருங்கரை மேலிருந் தின்புற நாடிவருங்கரை ஓரா வகையினிற் கங்கைஅருங்கரை பேணா தழுக்கது வாமே.

உரை

மாயையால் உலகப் பற்றுக்களில் சிக்கிக்கொண்ட உயிர்கள், அந்தப் பற்றுக்களின்மேல் வைத்திருக்கும் பாசத்திலேயே மூழ்கிக்கொண்டு, தமது உள்ளத்திற்குள் உத்தமனாக வீற்றிருக்கும் இறைவனை உணராமலும், அவன் அருளிய அமிர்தத்தை அருந்தி பேரின்பத்தில் திளைக்காமலும் இருப்பது, கங்கையின் புனித நீரில் மூழ்கிப் பாவ அழுக்குகளைப் போக்கிக்கொள்ள முயலாமல் கரையிலேயே நின்று பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்றதாகும்.

கங்கையில் மூழ்கிப் பாவத்தைத் தீர்த்துக்கொள்ள முடியும் போதும் அதைச் செய்யாமல் கரையிலேயே நின்று பார்ப்பதைப் போல, தமக்குள்ளேயே இறைவனை உணர்ந்து பேரின்பம் பெற முடியும் போதும் அதைச் செய்யாமல், உலகச் சிற்றின்பங்களிலேயே திளைத்திருப்பதைத்தான் உயிர்கள் விரும்புகின்றன.

வரி வாரியாக

  • வரி 1

    மாயையால் உலகப் பற்றுக்களில் சிக்கிக்கொண்ட உயிர்கள், அந்தப் பற்றின்மேல் வைத்திருக்கும் பாசத்திலேயே மூழ்கிக்கொண்டு, தமது உள்ளத்திற்குள் உத்தமனாக வீற்றிருக்கும் இறைவனை உணராமல் இருக்கின்றன.

  • வரி 2

    அவன் அருளிய அமிர்தத்தை அருந்தி பேரின்பத்தில் திளைப்பதைத் தேடிச் செல்லாமலே இருக்கின்றன.

  • வரி 3

    கங்கையின் புனித நீரில் மூழ்கிப் பாவ அழுக்குகளைப் போக்கிக்கொள்ள முயலாமல்,

  • வரி 4

    கரையிலேயே நின்று பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்றதாகும்.

திருமந்திரம் பாடல் #439

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout