தொடர்ந்து படிக்கread this section continuously
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்நன்றது செய்யும் மலர்மிசை மேலயன்என்றிவ ராகி இசைந்துஇருந் தானே.
உரைmeaning
ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் தாமாகவே நிறைந்து நின்று மாயையால் மறைத்திருப்பவன் மகேசுவரன். அழிக்கவும் காக்கவும் உலகங்கள் அனைத்திலும் சென்று இயங்கிக்கொண்டிருப்பவன் உருத்திரனாகிய திருமால். நன்மைக்காகப் படைப்புகளைச் செய்துகொண்டு தாமரை மலரின் மேல் வீற்றிருப்பவன் பிரம்மன். இவர்கள் அனைவரும் தாமாகவே தனித்தனியே இருந்தும், தாம் புரியும் தொழில்களில் ஒன்றாகவே இணைந்திருக்கின்றான் இறைவன்.
Maheswaran is the one who, dwelling of himself, fills the heart of every soul completely, yet conceals himself by maya. Rudran-Thirumal is the one who goes and moves through all the worlds, to destroy and to protect. Brahman is the one who creates for the sake of good and dwells upon the lotus flower. Though each of these stands as himself, God remains united as one within the very works they perform.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் தாமாகவே நிறைந்து நின்று மாயையால் மறைத்திருப்பவன் மகேசுவரன்.
Maheswaran is the one who, dwelling of himself, fills the heart of every soul completely, yet conceals himself by maya.
- வரி 2Line 2
அழிக்கவும் காக்கவும் உலகங்கள் அனைத்திலும் சென்று இயங்கிக்கொண்டிருப்பவன் உருத்திரனாகிய திருமால்.
Rudran-Thirumal is the one who goes and moves through all the worlds, to destroy and to protect.
- வரி 3Line 3
நன்மைக்காகப் படைப்புகளைச் செய்துகொண்டு தாமரை மலரின் மேல் வீற்றிருப்பவன் பிரம்மன்.
Brahman is the one who creates for the sake of good and dwells upon the lotus flower.
- வரி 4Line 4
இவர்கள் அனைவரும் தாமாகவே தனித்தனியே இருந்தும், தாம் புரியும் தொழில்களில் ஒன்றாகவே இணைந்திருக்கின்றான் இறைவன்.
Though each of these stands as himself, God remains united as one within the very works they perform.
திருமந்திரம் பாடல் #438





