தொடர்ந்து படிக்கread this section continuously
ஒளித்துவைத் தென்னுள் ளுறவுணர்ந் தீசன்வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டேகளிப்பொடுங் காதன்மை என்னும் பெருமைவெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.
உரைmeaning
இறைவன் எம்முள் மறைந்திருந்ததை அவனது திருவருளாலேயே எமது உள்ளத்திற்குள் உணர்ந்து வேண்ட, அவன் யாம் இருந்த அதே இடத்திலேயே வெளிப்பட்டு நின்று அருள் புரிந்தான். எப்போதும் தெகிட்டாத பேரின்பத்தை வழங்கும் பெருமைக்குரிய இறைவனை, உயிரின் உள்ளத்திற்குள் ஒளிந்திருந்தாலும், உண்மையான அன்போடு உள்ளம் உருகி வேண்டினால், தமக்கு முன்பாகவே வந்து நின்று அருள்புரிவதை உணரலாம்.
By his own sacred grace, we came to realize within our heart that God had been hidden within us, and, as we called to him, he manifested and stood in that very place where we were and granted his grace. Even though this great and glorious God, who grants a bliss that never grows stale, remains hidden within the heart of the soul, if the heart melts and calls him with true love, one can feel him come and stand right before oneself and grant his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவன் எம்முள் மறைந்திருந்ததை அவனது திருவருளாலேயே எமது உள்ளத்திற்குள் உணர்ந்தோம்.
By his own sacred grace, we came to realize within our heart that God had been hidden within us.
- வரி 2Line 2
அப்படி வேண்ட, அவன் யாம் இருந்த அதே இடத்திலேயே வெளிப்பட்டு நின்று அருள் புரிந்தான்.
As we called to him, he manifested and stood in that very place where we were and granted his grace.
- வரி 3Line 3
எப்போதும் தெகிட்டாத பேரின்பத்தை வழங்கும் பெருமைக்குரிய அந்த இறைவன்,
That great and glorious God, who grants a bliss that never grows stale,
- வரி 4Line 4
உயிரின் உள்ளத்திற்குள் ஒளிந்திருந்தாலும், உண்மையான அன்போடு உள்ளம் உருகி வேண்டினால், தமக்கு முன்பாகவே வந்து நின்று அருள்புரிவதை உணரலாம்.
though he remains hidden within the heart of the soul, if the heart melts and calls him with true love, one can feel him come and stand right before oneself and grant his grace.
திருமந்திரம் பாடல் #437





