தொடர்ந்து படிக்கread this section continuously
மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்உண்ணின்ற யோனிகள் எல்லாம் ஒருவனேகண்ணொன்று தான்பல காணும் தனைக்காணாஅண்ணலும் அவ்வண்ணமே ஆகிநின் றானே.
உரைmeaning
உயிர்களுக்கு நல்ல முறையில் பயன்படும் பல்வேறு விதமான பாத்திரங்களைக் குயவன் செய்தாலும், அனைத்தையும் ஒரே விதமான களிமண்ணிலிருந்துதான் செய்கின்றான். அதுபோலவே, உலகத்தில் பல்வேறு உருவங்களில் பல பிறவிகள் எடுத்தாலும், அனைத்துப் பிறவிகளிலும் ஆன்மாவாக இருப்பவன் இறைவன் ஒருவனே. உயிர்களின் கண்கள் இரண்டாக இருந்து, ஒரே விதமான காட்சிகளைக் கண்டாலும், தமது உருவத்தை அவற்றால் காண முடியாது. அதுபோலத்தான் இறைவனும், ஒவ்வோர் உயிரின் உள்ளத்துக்குள் இருந்து உயிர்களுக்கு அனைத்தையும் உணரவைத்தாலும், தம்மை மட்டும் உணர முடியாதவனாக இருக்கின்றான்.
Though the potter makes vessels of many kinds, all of them serving living beings well, he makes every one of them from the same clay. In the same way, though many births are taken in the world in many forms, the one who stands as the soul in every one of those births is God alone. The eyes of living beings are two, and though they see the same sights, they cannot see their own form. So too God, though he dwells within the heart of every living being and causes them to know everything, remains the one thing they cannot know.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
உயிர்களுக்குப் பயன்படும் பல்வேறு விதமான பாத்திரங்களைக் குயவன் செய்தாலும், அனைத்தையும் ஒரே விதமான களிமண்ணிலிருந்துதான் செய்கின்றான்.
Though the potter makes vessels of many kinds to serve living beings, he makes every one of them from the same clay.
- வரி 2Line 2
அதுபோலவே, உலகத்தில் பல்வேறு உருவங்களில் பல பிறவிகள் எடுத்தாலும், அனைத்துப் பிறவிகளிலும் ஆன்மாவாக இருப்பவன் இறைவன் ஒருவனே.
In the same way, though many births are taken in the world in many forms, the one who stands as the soul in every one of them is God alone.
- வரி 3Line 3
உயிர்களின் கண்கள் இரண்டாக இருந்து, ஒரே விதமான காட்சிகளைக் கண்டாலும், தமது உருவத்தை அவற்றால் காண முடியாது.
The eyes of living beings are two, and though they see the same sights, they cannot see their own form.
- வரி 4Line 4
அதுபோலத்தான் இறைவனும், ஒவ்வோர் உயிரின் உள்ளத்துக்குள் இருந்து அனைத்தையும் உணரவைத்தாலும், தம்மை மட்டும் உணர முடியாதவனாக இருக்கின்றான்.
So too God, though he dwells within the heart of every living being and causes them to know everything, remains the one thing they cannot know.
திருமந்திரம் பாடல் #440





