விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டுதண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்துஉண்ணின் றுருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்கண்ணின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.
களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்திகளிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்களிம்பணு காத கதிரொளி காட்டிப்பளிங்கிற் பவழம் பதித்தான் பதியே.
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்பதியினைப் போல்பசு பாசம் அநாதிபதியினை சென்றணு காப்பசு பாசம்பதியணு கில்பசு பாசம் நிலாவே.
வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்திதாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்தோயமது வாய்எழும் சூரிய னாமே.
சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவேசூரிய காந்தமும் சூழ்பஞ்சைச் சுட்டிடாசூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
மலங்களைந் தாமென மாற்றி அருளித்தலங்களைந் தானற் சதாசிவ மானபுலங்களைந் தானப் பொதுவினுள் நந்திநலங்களைந் தானுள் நயந்தான் அறிந்தே.
அறிவைம் புலனுட னேநான்ற தாகிநெறியறி யாதுற்ற நீராழம் போலஅறிவறி வுள்ளே அழிந்தது போலகுறியறி விப்பான் குருபர னாமே.
ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்தாமே தனிமன்றில் தன்னம் தனிநித்தம்தீமேவு பல்கர ணங்களுள் உற்றனதாமேழ் பிறப்புஎரி சார்ந்தவித் தாமே.
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்சுத்தத் துரியம் பிறந்து துடக்கறஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடுசெத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.
சிவயோக மாவது சித்தசித் தென்றுதவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்அவயோகம் சாரா தவன்பதி போகநவயோக நந்தி நமக்களித் தானே.
அளித்தான் உலகெங்கும் தானான உண்மைஅளித்தான் அமரர் அறியா உலகம்அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்அளித்தான் பேரின்பத் தருள்வெளி தானே.
வெளியில் வெளிபோய் விரவிய வாறும்அளியில் அளிபோய் அடங்கிய வாறும்ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்தெளியும் அவரே சிவசித்தர் தாமே.
சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்சத்தமும் சத்த முடிவும்தம் முள்கொண்டோர்நித்தர் நிமலர் நிராமயர் நீள்பரமுத்தர்தம் முத்தி முதல்முப்பத்து ஆறே.
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்ஒப்பிலாத ஆனந்தத் துள்ளொளி புக்குச்செப்பரிய சிவங்கண்டு தான் தெளிந்துஅப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.
இருந்தார் சிவமாகி எங்குந்தா மாகிஇருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கிஇருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்துஇருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.
சோம்பர் இருப்பது சுத்த வெளியிலேசோம்பர் கிடப்பது சுத்த வெளியிலேசோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே.
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளேதூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளேதூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளேதூங்கிக்கண் டார்நிலை சொல்வது எவ்வாறே.
எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லைஅவ்வா றருட்செய்வன் ஆதி பரன்தானும்ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்செவ்வானிற் செய் செழுஞ்சுடர் மாணிக்கமே.
மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்பேணித் தொழுதுஎன்ன பேறு பெற்றாரே.
பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறிபெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்பெற்றார்அம் மன்றிற் பிரியாய் பெரும்பேறுபெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.
பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்அருமை எளிமை அறிந்தறி வாரார்ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கிஇருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.
புரையற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்திரையற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்உரையற் றுணர்வோர் உடம்பிங் கொழிந்தால்கரையற்ற சோதி கலந்தசத் தாமே.
சத்த முதலைந்தும் தன்வழித் தான்சாரில்சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோசுத்த வெளியில் சுடரில் சுடர்சேரும்அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.
அப்பினிற் கூர்மை ஆதித்தனின் வெம்மையால்உப்பெனப் பேர்பெற் றருச்செய்த அவ்வுருஅப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.
அடங்குபே ரண்டத் தனுஅண்டம் சென்றங்கிடங்கொண்ட தில்லை ஈதன்றி வேறுண்டோகடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்திடம்பெற நின்றான் திருவடி தானே.
திருவடி யேசிவ மாவது தேரில்திருவடி யேசிவ லோகம்சிந் திக்கில்திருவடி யேசெல் கதியது செப்பில்திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்தெளிவு குருவின் திருநாமம் செப்பல்தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
தானே புலனைந்தும் தன்வச மாயிடும்தானே புலனைந்தும் தன்வசம் போயிடும்தானே புலனைந்தும் தன்னில் மடைமாறும்தானே தனித்தெம் பிரான்தனைச் சந்தித்தே.
சந்திப் பதுநந்தி தன்திருத் தாளினைசிந்திப் பதுநந்தி செய்ய திருமேனிவந்திப் பதுநந்தி நாமம்என் வாய்மையால்புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.
போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்நாதன் நடத்தால் நயனம் களிகூரவேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #113
1 / 30




