திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 131

தொடர்ந்து படிக்கread this section continuously

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்பேணித் தொழுதுஎன்ன பேறு பெற்றாரே.

உரை

முந்தைய பாடலில் உள்ளபடி பேரொளியாய் இருக்கும் மாணிக்கத்தின் (சிவன் - செந்நிறம்) உள்ளிருந்து, மரகத ஜோதியாய் (சக்தி - பச்சை) சக்தியே சிவனுக்குத் திருமேனியாக, இருவரும் இணைந்து தில்லையின் பொன்னம்பலத்தில் ஆடும் திருநடனத்தைத் தம்முள் தரிசித்த சிவயோகியர், என்ன பேறு பெற்றார்களோ என்று வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத அளவு பெரிய பேறு பெற்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    முந்தைய பாடலில் உள்ளபடி பேரொளியாய் இருக்கும் மாணிக்கத்தின் (சிவன் - செந்நிறம்) உள்ளிருந்து, மரகத ஜோதியாய் (சக்தி - பச்சை) சக்தி தோன்றுகிறாள்.

  • வரி 2

    அந்தச் சக்தியே சிவனுக்குத் திருமேனியாக இருக்கிறாள்.

  • வரி 3

    இருவரும் இணைந்து தில்லையின் பொன்னம்பலத்தில் ஆடும் திருநடனத்தைத் தம்முள் தரிசித்த சிவயோகியர்.

  • வரி 4

    அவர்கள் என்ன பேறு பெற்றார்களோ என்று வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத அளவு பெரிய பேறு பெற்றார்கள்.

திருமந்திரம் பாடல் #131

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout