திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 130

தொடர்ந்து படிக்கread this section continuously

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லைஅவ்வா றருட்செய்வன் ஆதி பரன்தானும்ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்செவ்வானிற் செய் செழுஞ்சுடர் மாணிக்கமே.

உரை

முந்தைய பாடலில் கூறியபடி பேரின்பத்தில் இருக்கும் சித்தர்கள் எந்த அளவு பேரறிவு ஞானத்தைப் பெற்றிருக்கிறார்களோ, அந்த அளவு அவர்களுக்குத் தன் அருளை வழங்குபவன், ஆதியிலிருந்து இருக்கும் பரம்பொருளான சதாசிவமூர்த்தி. அவனே ஈடு இணை சொல்லமுடியாத தில்லையம்பலத்தில் உமாதேவியார் கண்டு களிக்க திருநடனம் ஆடுகின்றபோது, மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது சிவந்து தெரியும் வானத்தையும் விட சிவப்பான சுடர்களுடைய பேரொளியைத் தரும் மாணிக்கம் போல இருப்பவன்.

வரி வாரியாக

  • வரி 1

    முந்தைய பாடலில் கூறியபடி பேரின்பத்தில் இருக்கும் சித்தர்கள் எந்த அளவு பேரறிவு ஞானத்தைப் பெற்றிருக்கிறார்களோ...

  • வரி 2

    ...அந்த அளவு அவர்களுக்குத் தன் அருளை வழங்குபவன், ஆதியிலிருந்து இருக்கும் பரம்பொருளான சதாசிவமூர்த்தி.

  • வரி 3

    அவனே ஈடு இணை சொல்லமுடியாத தில்லையம்பலத்தில் உமாதேவியார் கண்டு களிக்க திருநடனம் ஆடுகின்றான்.

  • வரி 4

    மாலைநேரத்தில் சூரியன் மறையும்போது சிவந்து தெரியும் வானத்தையும் விட சிவப்பான சுடர்களுடைய பேரொளியைத் தரும் மாணிக்கம் போல இருப்பவன் அவன்.

திருமந்திரம் பாடல் #130

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout