திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 129

தொடர்ந்து படிக்கread this section continuously

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளேதூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளேதூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளேதூங்கிக்கண் டார்நிலை சொல்வது எவ்வாறே.

உரை

முந்தைய பாடலில் கூறியபடி சமாதி நிலையில் இருக்கும் சித்தர்கள், அனைத்து உலகங்களும் சிவமாய் இருப்பதாகிய சிவலோகத்தைத் தமக்குள்ளே தரிசித்துக்கொண்டார்கள். அப்படியே இருந்துதான், சிவனை விட்டுப் பிரியாது சிவனோடு கலந்து நிற்கும் சிவயோகத்தையும் தம்முள்ளே கண்டார்கள். அப்படியே இருந்துதான் சிவபோகமாகிய பேரானந்த நிலையையும் தமக்குள்ளே கண்டார்கள். அப்படி அவர்கள் இருக்கும் நிலையை யாம் வெறும் வார்த்தைகளால் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? அதை அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே அறியமுடியும்.

வரி வாரியாக

  • வரி 1

    முந்தைய பாடலில் கூறியபடி சமாதி நிலையில் இருக்கும் சித்தர்கள், அனைத்து உலகங்களும் சிவமாய் இருப்பதாகிய சிவலோகத்தைத் தமக்குள்ளே தரிசித்துக்கொண்டார்கள்.

  • வரி 2

    அப்படியே இருந்துதான், சிவனை விட்டுப் பிரியாது சிவனோடு கலந்து நிற்கும் சிவயோகத்தையும் தம்முள்ளே கண்டார்கள்.

  • வரி 3

    அப்படியே இருந்துதான் சிவபோகமாகிய பேரானந்த நிலையையும் தமக்குள்ளே கண்டார்கள்.

  • வரி 4

    அப்படி அவர்கள் இருக்கும் நிலையை யாம் வெறும் வார்த்தைகளால் எப்படி விளக்கிச் சொல்ல முடியும்? அதை அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே அறியமுடியும்.

திருமந்திரம் பாடல் #129

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout