திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 128

தொடர்ந்து படிக்கread this section continuously

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலேசோம்பர் கிடப்பது சுத்த வெளியிலேசோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்சோம்பர் கண்டாரச் சுருதிக்கண் தூக்கமே.

உரை

சித்தர்கள் இறைவனின் திருநாமத்தை மட்டும் மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருப்பது, எந்தவிதமான மலங்களும் வினைகளும் இல்லாத சுத்தமான பரவெளியில்தான். அவர்கள் தம் ஜெபத்தின் பலனால் இறைவனிடமிருந்து பெற்ற பேரின்பத்தில் மூழ்கி செயலற்றுக் கிடப்பதும் அதே சுத்தமான பரவெளியில்தான். அவ்வாறு பேரின்பம் கண்ட நிலையில், அவர்கள் மனதிற்குள் ஜெபித்து வந்த இறைவனின் திருநாமமும் மறைந்து, அத்திருநாமத்தில் லயித்து, இறைவனின் திருவடிகளில் கிடைக்கும் பேரின்பத்தில் எண்ணங்களும் இல்லாமல் உணர்வுகளும் இல்லாமல் தூங்குபவர்கள் போன்ற சமாதி நிலையிலேயே அவர்கள் இருப்பார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    சித்தர்கள் இறைவனின் திருநாமத்தை மட்டும் மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருப்பது, மலங்களும் வினைகளும் இல்லாத சுத்தமான பரவெளியில்தான்.

  • வரி 2

    அவர்கள் தம் ஜெபத்தின் பலனால் பெற்ற பேரின்பத்தில் மூழ்கி செயலற்றுக் கிடப்பதும் அதே சுத்தமான பரவெளியில்தான்.

  • வரி 3

    அவ்வாறு பேரின்பம் கண்ட நிலையில், அவர்கள் ஜெபித்து வந்த இறைவனின் திருநாமமும் மறைந்து அத்திருநாமத்தில் லயித்துவிடும்.

  • வரி 4

    இறைவனின் திருவடிகளில் கிடைக்கும் பேரின்பத்தில் எண்ணங்களும் இல்லாமல் உணர்வுகளும் இல்லாமல் தூங்குபவர்கள் போன்ற சமாதி நிலையிலேயே அவர்கள் இருப்பார்கள்.

திருமந்திரம் பாடல் #128

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout