திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 127

தொடர்ந்து படிக்கread this section continuously

இருந்தார் சிவமாகி எங்குந்தா மாகிஇருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கிஇருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்துஇருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.

உரை

சித்தர்கள் தாமே சிவம் என்பதை உணர்ந்து, சிவம் போலவே அனைத்துமே தாம்தான் என்ற நிலையில் இருப்பார்கள். சிவம் செய்யும் ஐந்துவித தொழில்களையும் ரசித்தபடியே இருப்பார்கள். இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளின் தன்மைகளை உணர்ந்திருப்பார்கள். தமக்கென செய்யும் செயலும் பேச்சும் எதுவும் இல்லாமல் சிவத்தோடு ஒன்றியே இருப்பார்கள் சித்தர்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    சித்தர்கள் தாமே சிவம் என்பதை உணர்ந்து, சிவம் போலவே அனைத்துமே தாம்தான் என்ற நிலையில் இருப்பார்கள்.

  • வரி 2

    சிவம் செய்யும் ஐந்துவித தொழில்களையும் ரசித்தபடியே இருப்பார்கள்.

  • வரி 3

    இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்திலும் நடக்கும் நிகழ்வுகளின் தன்மைகளை உணர்ந்திருப்பார்கள்.

  • வரி 4

    தமக்கென செய்யும் செயலும் பேச்சும் எதுவும் இல்லாமல் சிவத்தோடு ஒன்றியே இருப்பார்கள் சித்தர்கள்.

திருமந்திரம் பாடல் #127

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout