திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 126

தொடர்ந்து படிக்கread this section continuously

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்ஒப்பிலாத ஆனந்தத் துள்ளொளி புக்குச்செப்பரிய சிவங்கண்டு தான் தெளிந்துஅப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.

உரை

முந்தைய பாடலில் கூறிய முப்பத்தாறு தத்துவங்களையும், முக்தி பெறுவதற்கு ஏறிச்செல்லும் படிக்கட்டுகளைப் போல, ஒவ்வொன்றாக இறையருளால் அறிந்துகொண்டு, அதன் பயனாக ஈடு இணையில்லாத பேரானந்தத்தை வழங்கும் பேரொளியைத் தமக்குள்ளே கண்டு, வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத சிவத்தைத் தமக்குள்ளே தரிசித்து, தாம்தான் சிவம் என்பதை உணர்ந்து தெளிந்தவர்களாக, இறைவன் வழங்கிய இந்தப் பேரருளையே தமது பிறவியின் பெரும் பரிசாக ஏற்றுக்கொண்டு, அவன் வழங்கிய பேரானந்த நிலையிலேயே அமர்ந்திருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    முந்தைய பாடலில் கூறிய முப்பத்தாறு தத்துவங்களையும், முக்தி பெறுவதற்கு ஏறிச்செல்லும் படிக்கட்டுகளைப் போல, ஒவ்வொன்றாக இறையருளால் அறிந்துகொண்டவர்கள்.

  • வரி 2

    அதன் பயனாக ஈடு இணையில்லாத பேரானந்தத்தை வழங்கும் பேரொளியைத் தமக்குள்ளே கண்டவர்கள்.

  • வரி 3

    வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத சிவத்தைத் தமக்குள்ளே தரிசித்து, தாம்தான் சிவம் என்பதை உணர்ந்து தெளிந்தவர்கள்.

  • வரி 4

    இறைவன் வழங்கிய இந்தப் பேரருளையே தமது பிறவியின் பெரும் பரிசாக ஏற்றுக்கொண்டு, அவன் வழங்கிய பேரானந்த நிலையிலேயே அமர்ந்திருப்பவர்கள் சித்தர்கள் ஆவார்கள்.

திருமந்திரம் பாடல் #126

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout