திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 132

தொடர்ந்து படிக்கread this section continuously

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறிபெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்பெற்றார்அம் மன்றிற் பிரியாய் பெரும்பேறுபெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.

உரை

முந்தைய பாடலில் உள்ளபடி சிவசக்தியின் திருநடனத்தைத் தம்முள்ளே கண்ட சிவயோகியர், இவ்வுலகத்திலிருந்து என்றும் பிரிந்துவிடாத பெரும் வழியையும், இவ்வுலகில் மீண்டும் பிறவாத பெரும் பயனையும், தில்லை பொன்னம்பலத்தில் தாம் தரிசித்த சிவசக்தியர் தம்மை என்றும் பிரியாமல் அவர்களுடனே பேரானந்தத்தில் நிலைத்திருக்கும் பெரும் பேறையும், அந்நிலையில் உலகோடு எந்தச் செயலும் கொள்ளாமல் தனித்துத் தமக்குள்ளே தியானித்திருக்கும் பெருமையையும், ஆகிய இவை அனைத்தையுமே பெற்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    முந்தைய பாடலில் உள்ளபடி சிவசக்தியின் திருநடனத்தைத் தம்முள்ளே கண்ட சிவயோகியர், இவ்வுலகத்திலிருந்து என்றும் பிரிந்துவிடாத பெரும் வழியைப் பெற்றார்கள்.

  • வரி 2

    இவ்வுலகில் மீண்டும் பிறவாத பெரும் பயனையும் அவர்கள் பெற்றார்கள்.

  • வரி 3

    தில்லை பொன்னம்பலத்தில் தாம் தரிசித்த சிவசக்தியர் தம்மை என்றும் பிரியாமல் அவர்களுடனே பேரானந்தத்தில் நிலைத்திருக்கும் பெரும் பேறையும் பெற்றார்கள்.

  • வரி 4

    அந்நிலையில் உலகோடு எந்தச் செயலும் கொள்ளாமல் தனித்துத் தமக்குள்ளே தியானித்திருக்கும் பெருமையையும் பெற்றார்கள்.

திருமந்திரம் பாடல் #132

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout