தொடர்ந்து படிக்கread this section continuously
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டுதண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்துஉண்ணின் றுருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்கண்ணின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.
உரைmeaning
வானுலகில் (அண்டங்களில்) வெவ்வேறு நிலைகளில் இருந்த ஆன்மாக்கள் இவ்வுலகில் இறங்கி வந்து, தத்தம் வினைக்கு ஏற்ப பலவிதமான உடல்களை எடுத்துப் பிறக்கும்போது, இறைவன் அடியவர்களின் உள்ளத்தைக் குளிரச் செய்யும் தன் திருவடிகளை அவர்கள் தலைக்கு மேலே காவலாக வைக்கின்றான். அவர்களது உடலுக்குள் உயிர்ச்சக்தியாய் நின்று, தான் யார் என்பதை உள்ளிருந்தே உணர்த்தி, உயிர்களுக்கு ஞானக்காட்சியாய் தன்னுடைய ஒப்பற்ற பேரானந்த நிலையைக் காட்டி, அடியவர்களின் ஆன்மாவை மூடியிருந்த மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை அகற்றி அருளுகின்றான் இறைவன்.
When souls that dwelt in the sky, the cosmos, at different states descend into this world and take birth in bodies of many kinds according to each one's karma, God places his own cooling holy feet as a guard over their heads. He stands within their bodies as the life force, makes them realise from within who he is, and shows living beings, as a vision of wisdom, his own unmatched state of supreme bliss. In this way God removes the three impurities that had covered the devotees' souls, egoism, karma and maya, and grants his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
வானுலகில் (அண்டங்களில்) வெவ்வேறு நிலைகளில் இருந்த ஆன்மாக்கள் இவ்வுலகில் இறங்கி வந்து, தத்தம் வினைக்கு ஏற்ப பலவிதமான உடல்களை எடுத்துப் பிறக்கின்றன.
Souls that dwelt in the sky, the cosmos, at different states descend into this world and take birth in bodies of many kinds according to each one's karma.
- வரி 2Line 2
அப்போது இறைவன், அடியவர்களின் உள்ளத்தைக் குளிரச் செய்யும் தன் திருவடிகளை அவர்கள் தலைக்கு மேலே காவலாக வைக்கின்றான்.
At that moment God places his own cooling holy feet as a guard over their heads.
- வரி 3Line 3
அவர்களது உடலுக்குள் உயிர்ச்சக்தியாய் நின்று, தான் யார் என்பதை உள்ளிருந்தே உணர்த்தி, உயிர்களுக்கு ஞானக்காட்சியாய் தன்னுடைய ஒப்பற்ற பேரானந்த நிலையைக் காட்டுகின்றான்.
He stands within their bodies as the life force, makes them realise from within who he is, and shows living beings, as a vision of wisdom, his own unmatched state of supreme bliss.
- வரி 4Line 4
இவ்வாறு அடியவர்களின் ஆன்மாவை மூடியிருந்த மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை அகற்றி அருளுகின்றான் இறைவன்.
In this way God removes the three impurities that had covered the devotees' souls, egoism, karma and maya, and grants his grace.
திருமந்திரம் பாடல் #113





