திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 112

பாயிரம்திரு மும்மூர்த்திகளின் முறைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

தானொரு கூறு சதாசிவன் எம்இறைவானொரு கூறு மருவியும் அங்குளன்கோனொரு கூறுடல் உள்நின் றுயிர்க்கின்றதானொரு கூறு சலமய னாமே.

உரை

எமது இறைவனாகிய சிவமே ஞானசக்தியை ஒரு பகுதியாகச் சேர்த்து சதாசிவமாக இருக்கின்றான். (சதாசிவம் அசையும் சக்தியாகவும், அசையா சக்தியாகவும் இரு பகுதியாக உள்ளான்.) அவனே வானத்தில் இருக்கும் அனைத்துத் தெய்வங்களின் உருவங்களாகவும் மருவி அங்கு இருக்கின்றான். உலகங்கள் அனைத்திற்கும் தலைவனான அவனே, அவ்வுலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களின் உடலுக்குள்ளும் ஒரு பாகமாக இருந்துகொண்டு, உள்ளிருந்து அந்த உடலை இயக்கும் உயிர்சக்தியாகவும் இருக்கின்றான். இப்படி அனைத்திலும் ஒரு பாகமாக இருக்கும் சிவமே அனைத்தின் தன்மைகளிலும் கலந்து நின்று அனைத்துமாகவும் இருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    எமது இறைவனாகிய சிவமே ஞானசக்தியை ஒரு பகுதியாகச் சேர்த்து சதாசிவமாக இருக்கின்றான்.

  • வரி 2

    அவனே வானத்தில் இருக்கும் அனைத்துத் தெய்வங்களின் உருவங்களாகவும் மருவி அங்கு இருக்கின்றான்.

  • வரி 3

    உலகங்கள் அனைத்திற்கும் தலைவனான அவனே, அவ்வுலகங்களில் இருக்கும் அனைத்து உயிர்களின் உடலுக்குள்ளும் ஒரு பாகமாக இருந்துகொண்டு, உள்ளிருந்து அந்த உடலை இயக்கும் உயிர்சக்தியாகவும் இருக்கின்றான்.

  • வரி 4

    இப்படி அனைத்திலும் ஒரு பாகமாக இருக்கும் சிவமே அனைத்தின் தன்மைகளிலும் கலந்து நின்று அனைத்துமாகவும் இருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #112

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout