திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 111

பாயிரம்திரு மும்மூர்த்திகளின் முறைமை

தொடர்ந்து படிக்கread this section continuously

பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புற மாகிவரத்தினுள் மாயவ னாய்அயன் ஆகித்தரத்தினுள் தான்பல தன்மையன் ஆகிக்கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.

உரை

பரம்பொருள் என்பதில் ஒன்றானவனாகவும், உயிர்களுக்குள்ளும் வெளியிலும் இருப்பவனாகவும் இருப்பவன் அவனே. ஆன்மா மாதவம் செய்து பெற்ற வரத்தினால் திருமாலாகவும் பிரம்மனாகவும் ஆகிறான். தவம் செய்த தகுதிக்கேற்ப வெவ்வேறு விதமான தரங்களில் பலவித தன்மைகள் கொண்ட தெய்வங்களாகவும் ஆகிறான். செய்கின்ற தொழில்களில் பலவிதமாக நின்று அருளுகின்றவன் சதாசிவமூர்த்தியாகிய ஒருவனே.

வரி வாரியாக

  • வரி 1

    பரம்பொருள் என்பதில் ஒன்றானவனாகவும், உயிர்களுக்குள்ளும் வெளியிலும் இருப்பவனாகவும் இருப்பவன் அவனே.

  • வரி 2

    ஆன்மா மாதவம் செய்து பெற்ற வரத்தினால் திருமாலாகவும் பிரம்மனாகவும் ஆகிறான்.

  • வரி 3

    தவம் செய்த தகுதிக்கேற்ப வெவ்வேறு விதமான தரங்களில் பலவித தன்மைகள் கொண்ட தெய்வங்களாகவும் ஆகிறான்.

  • வரி 4

    செய்கின்ற தொழில்களில் பலவிதமாக நின்று அருளுகின்றவன் சதாசிவமூர்த்தியாகிய ஒருவனே.

திருமந்திரம் பாடல் #111

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout